படுக்கைக்கு அழைத்த நபரை அடையாளம் காட்டி தோலுரித்த மாஸ்டர் நடிகை.. வைரல் போட்டோ!
சென்னை: தன்னை படுக்கைக்கு அழைத்த நபரை அடையாளம் காட்டிய மாஸ்டர் பட நடிகை அவரை பிளாக் செய்துள்ளார்.
விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றவர் சவுந்தர்யா.
பின்னர் அதேசேனலில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியலில் கதாநாயகியாக நடித்தார்.

மாஸ்டர் படத்தில்
சவுந்தர்யா ஏராளமான ஷார்ட் பிலிம்களிலும் நடித்து உள்ளார். விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் நடித்துள்ளார் சவுந்தர்யா. சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் சவுந்தர்யா.

படுக்கைக்கு அழைத்து
அவ்வப்போது தனது போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார் சவுந்தர்யா. இந்நிலையில் நெட்டிசன் ஒருவர் சவுந்தர்யாவை படுக்கைக்கு அழைத்துள்ளார்.

ஸ்க்ரீன் ஷாட்
மேலும் ஆபாசமாகவும் சவுந்தர்யாவிடம் பேசியுள்ளார் அந்த நபர். அதனை பார்த்த சவுந்தர்யா அந்த நபர் அனுப்பிய மெஸேஜ்களை ஸ்க்ரீன் ஷாட்டாக எடுத்து தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

பிளாக் செய்த நடிகை
மேலும் அந்த நபரையும் பிளாக் செய்துள்ளார் சவுந்தர்யா. சவுந்தர்யாவின் இந்த பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேநேரத்தில் தன்னை படுக்கைக்கு அழைத்த நபரை அடையாளம் காட்டிய சவுந்தர்யாவுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications