ரஜினி எப்போதுமே கடவுள் மாதிரிதான்.. நடிகை இப்படி ஓபனாகவே சொல்லிட்டாங்களே

சென்னை: ரஜினிகாந்த் இந்திய அளவில் அடையாளப்பட்டவர். அவரது நடிப்பில் கடைசியாக வேட்டையன் திரைப்படம் வெளியாகி ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து முடித்து இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். கமல் ஹாசனுக்கு எப்படி மெகா ப்ளாக் பஸ்டரை லோகி கொடுத்தாரோ அதேபோல் தங்கள் தலைவர் ரஜினிக்கும் கொடுப்பார் என்று சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் நம்பிக்கொண்டிருக்கின்றனர்.

ரஜினிகாந்த்தான் திரைத்துறையில் இருக்கும் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். ஹீரோ என்றாலே வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதை உடைத்து காண்பித்தவர் அவர். தன்னுடைய துறுதுறு உடல்மொழியாலும். வித்தியாசமான தமிழ் உச்சரிப்பாலும் உச்சத்துக்கு சென்றவர் அவர். குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவருமே ரஜினிகாந்த்தை மெய் மறந்து ரசிப்பார்கள். இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கிறார்கள். அதனை கண்டு இந்திய திரையுலகமே ஆச்சரியத்தில் இருக்கிறது.

வேட்டையன்: 75வயதில்கூட படு பிஸியாக நடித்துவருகிறார் அவர். அந்தவகையில் அவர் கடைசியாக வேட்டையன் திரைப்படத்தில் நடித்தார். ஞானவேல் இயக்கியிருந்த அந்தப் படம் கடந்த மாதம் பெரும் எதிர்பார்ப்போடு வெளியானது. ஆனால் படத்துக்கு ரசிகர்கள் தங்களது சுமாரான வரவேற்பையே கொடுத்தார்கள். அதனையடுத்து இப்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

நம்பிக்கை: கூலி படத்தை ரஜினியின் ரசிகர்கள் உச்சக்கட்டமாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஏனெனில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தை இயக்கி மெகா ஹிட்டை கொடுத்துவிட்டார். எனவே கமலுக்கு எப்படி மெகா ஹிட்டாக அமைந்ததோ அதேபோல் ரஜினிக்கும் கொடுக்க வேண்டும் என்று ஆர்வத்துடன் காத்திருக்கிறார்கள். ஆகஸ்ட் 14ஆம் தேஹி படமான ரிலீஸாகவிருக்கிறது. சமீபத்தில்தான் மேக்கிங் வீடியோ வெளியானது.

Actress Sreelekha Talks about Rajinikanth

ஜெயிலர் 2: கூலி படத்தில் நடித்து முடித்திருக்கும் அவர் இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கிவருகிறார். இதில் அவருடன் ரம்யா கிருஷ்ணன், பாலகிருஷ்ணா உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். அதுமட்டுமின்றி சந்தானமும் காமெடி ரோலி நடிக்கவிருப்பதாக ஒரு தகவல் ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால் அதில் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. படத்தின் முதல் பாகம் போல் இதுவும் மெகா ஹிட்டாகுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

ரஜினி என்றால் எளிமை: ரஜினிகாந்த்துக்கு இல்லாத புகழ் இல்லை, பணம் இல்லை. அவர் அவ்வளவு பெரிய இடத்தில் இருக்கிறார். இருந்தாலும் தான் நடத்துநராக இருந்தபோது தன்னிடம் இருந்த எளிமையை இன்னமும் அவர் இழக்கவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுவார்கள். அதுமட்டுமின்றி தன்னுடைய ஆரம்பகாலத்தில் தனக்கு உதவியவர்களையும் அவர் எவ்வளவு உயரத்துக்கு சென்றாலும் மறக்கவில்லை. அந்த பண்பும்கூட அவர் இவ்வளவு வளர்ந்ததற்கு ஒரு காரணமாக எடுத்துக்கொள்ளலாம்.

ஸ்ரீலேகா பேட்டி: இந்நிலையில் ரஜினிகாந்த் குறித்து பிரபல நடிகை ஸ்ரீலேகா தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் ஒரு விஷயத்தை குறிப்பிட்டிருக்கிறார். அவர் அளித்த அந்தப் பேட்டியில், "ரஜினிகாந்த் மாறவே இல்லை. அப்போது எப்படி இருந்தாரோ இப்போதும் அப்படியேத்தான் இருக்கிறார். அவர் எப்போதுமே கடவுள் போன்றுதான். ஷூட்டிங் ஸ்பாட்டில் அவருக்காக அத்தனை விஷயங்கள் இருக்கும். கேரவன் எல்லாம் பெரிய பங்களா மாதிரி இருக்கும். ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் சிம்ப்பிளாக ஏதோ ஒரு இடத்தில் அமர்ந்திருப்பார்" என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X