மழை பிடிக்காத மனிதன்... விஜய் ஆண்டனிக்கு ஜோடியாகும் ஊதா கலர் ரிப்பன்

சென்னை: நீண்ட இடைவெளிக்கு பிறகு, நடிகை ஸ்ரீதிவ்யா தமிழில் நடிக்கிறார். நடிகர் விஜய் ஆண்டனியுடன் மழை பிடிக்காத மனிதன் படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்த ஊதா கலரு ரிப்பன் என்று சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவில் நல்ல அடக்க ஒடுக்கமான கதாபாத்திரம் என்றால் டக்கென் நம் நினைவிற்கு வருபவர் நடிகை ஸ்ரீதிவ்யா தான். இயக்குனர் ரவி பாபு இயக்கிய மனசார (Manasara) என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ரீதிவ்யா. பொன்ராம் இயக்கத்தில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படம் மூலம் சிவகார்த்திக்கேயனுக்கு ஜோடியாக தமிழில் அறிமுகமானார்.

Actress Sri Divya Acts in Mazhai Pidikadha Manidhan

பாவாடை தாவணியில் நடித்து பலரின் மனதை அள்ளினார். மியாவ் என்று பூனை போல் கத்தினால் நினைவுக்கு வருபவர் ஸ்ரீதிவ்யாதான். ஊதா கலர் ரிப்பன் பாடல் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது கூடவே ஸ்ரீதிவ்யாவும்தான். வெள்ளைக்கார துரை, ஜீவா, காக்கி சட்டை, பெங்களூரு நாட்கள், ஈட்டி, போன்ற பல படங்களில் நடித்து வந்தார். அவர் கடைசியாக சங்கிலி புங்கிலி கதவ தொற திரைப்படத்திற்கு பிறகு வேறு எந்தப் படத்திலும் நடிக்கவில்லை.

Actress Sri Divya Acts in Mazhai Pidikadha Manidhan

சினிமாவில் நுழைந்து விட்டாலும் கூட, தனது ஒழுக்க கட்டுப்பாடுகளை கொஞ்சமும் விட்டுத்தராமல் இருந்து வந்தார். இதுவே அவர் எதிர்பார்த்த படவாய்ப்புகள் அமையாததற்கு முக்கிய காரணமாகும். இந்நிலையில், தற்போது மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிக்கும் தமிழ் திரைப்படத்தில் மீண்டும் ஒப்பந்தமாகி இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஒளிப்பதிவாளர், இயக்குனர் என்று அழுத்தமாக தடம் பதித்தவர் விஜய் மில்டன். அவர் இயக்கிய அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ள, கடுகு, கோலி சோடா 2 திரைப்படங்களுக்கு பிறகு ஒரு புதிய திரைப்படத்தை இயக்குகிறார். இந்த படத்துக்கு மழை பிடிக்காத மனிதன் என்று தலைப்பு வைக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது இயக்குனர் விஜய் மில்டன் நடிகர் விஜய் ஆண்டனியை வைத்து மழை பிடிக்காத மனிதன் என்ற திரைப்படத்தை இயக்குவதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.

Actress Sri Divya Acts in Mazhai Pidikadha Manidhan

இப்போது இந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீதிவ்யா கதாநாயகியாக நடிக்கிறார் என்ற தகவலை பட குழுவினர் வெளியிட்டனர். இசையமைப்பாளர், எடிட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது விஜய் ஆண்டனி அக்னி சிறகுகள், தமிழரசன், காக்கி ஆகிய திரைப்படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் நடிப்பார். ஸ்ரீதிவ்யா கைவசம் இந்தப் திரைப்படம் மட்டுமே இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X