வருத்தப்படாத வாலிபர் சங்கம் லதா பாண்டியை ஞாபகமிருக்கா.. உணவகம் ஒன்றில் என்ன பண்றாரு பாருங்க!
சென்னை: சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி கமர்ஷியல் ஹிட் அடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் லதா பாண்டி கதாபாத்திரத்தில் நடித்த அந்த ஊதா கலர் ரிப்பன் போட்ட நடிகை ஸ்ரீதிவ்யா ரெஸ்டரன்ட் ஒன்றில் எடுத்த லேட்டஸ்ட் போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.
குழந்தை நட்சத்திரமாக 2000ம் ஆண்டு அர்ஜுன் நடித்த அனுமன் ஜங்க்ஷன் படத்தில் அறிமுகமானவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

தமிழில் ஹீரோயினாக அறிமுகமான இவர், சிவகார்த்திகேயன் உடன் வருத்தப்படாத வாலிபர் சங்கம், காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார்.
ஸ்ரீதிவ்யா நடித்த படங்கள்: இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் 2013ம் ஆண்டு வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ஜீவா படத்தில் நடித்திருந்தார்.
வெள்ளைக்கார துரை, காக்கிச் சட்டை, இஞ்சி இடுப்பழகி, ஈட்டி, பெங்களூர் நாட்கள், பென்சில், மருது, ரெமோ, காஷ்மோரா, சங்கிலி புங்கிலி கதவ தொற உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த ஸ்ரீதிவ்யா 2017க்கு மேல் ஆளே காணோம்.

மார்க்கெட் காலி: தொடர்ந்து ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை தழுவ அதன் பின்னர் அவர் மார்க்கெட் முற்றிலுமாக காலியாகி விட்டது. கடைசியாக மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான ஜன கண மன படத்தில் ஸ்ரீதிவ்யா நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமிலும் ரொம்ப ஆக்டிவ் இல்லாமல் இருக்கும் ஸ்ரீதிவ்யா எப்போதாவது தான் வீடியோக்களையும் போட்டோக்களையும் பதிவிட்டு வருகிறார். இந்நிலையில், தனது தோழியுடன் உணவகம் ஒன்றில் எடுத்துக் கொண்ட லேட்டஸ்ட் போட்டோக்களை அவர் ஷேர் செய்துள்ளார்.

உணவகத்தில் ஸ்ரீதிவ்யா: ஹோட்டலில் வெறும் மெனுவையே முறைத்து பார்த்தபடியும் தனது சிறு வயது தோழியுடன் சில உணவுகளை உண்ணும்படியான போட்டோக்களை எடுத்துப் போட்டு இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்கு பல நாட்களுக்குப் பிறகு தரிசனம் கொடுத்துள்ளார்.
மேக்கப் இல்லாமலே அழகா இருக்கீங்க ஸ்ரீதிவ்யா அடிக்கடி இன்ஸ்டாவிலாவது போஸ்ட் போடுங்க, உங்களுக்காக 2 மில்லியன் ரசிகர்கள் ஃபாலோயர்களாக காத்துக்கிடக்கிறோம் என கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
கைவசம்: தமிழில் தற்போது மப்சல் மற்றும் ரெய்டு உள்ளிட்ட இரண்டு படங்களில் நடித்து வருகிறார் ஸ்ரீதிவ்யா. கூடிய சீக்கிரமே பழையபடி தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களுடன் மீண்டும் ஜோடி போட்டு நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











