Karthi 27: சில வாரங்களில் நிறைவடையும் கார்த்தி 27 சூட்டிங்.. மீண்டும் இணைந்த பிரபல ஹீரோயின்!

சென்னை: நடிகர் கார்த்தியின் கார்த்தி 27 படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்தை 96 பட இயக்குநர் பிரேம்குமார் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ராஜ்கிரண் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். பேமிலி சென்டிமெண்டை மையமாக வைத்து உருவாகிவருகிறது கார்த்தி 27. இந்தப் படத்திற்கு மெய்யழகன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இன்னும் சில தினங்களில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே நாளைய தினம் சர்தார் 2 படத்தின் பூஜை சென்னையில் பிரம்மாண்டமாக நடக்கவுள்ளது. இந்த மாதம் கார்த்திக் ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அவரது படங்களின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகவுள்ளன. கார்த்தி 26 படத்தை நலன் குமாரசாமி இயக்கிவரும் சூழலில் படத்தின் பர்ஸ்ட் லுக் இந்த மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தை ஸ்டூடியோ கிரீன் தயாரித்து வருகிறது. இதனிடையே சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் கார்த்தியின் கார்த்தி 27 படத்தின் அப்டேட்டும் இந்த மாதத்தில் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

Actress Sri divya joined in Karthis Karthi 27 movie it seems

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தியின் அடுத்தடுத்தப் படங்கள் ரசிகர்களை கவர்ந்துவரும் நிலையில் கடந்த ஆண்டில் வெளியான ஜப்பான் படம் அவருக்கு சொதப்பலாக அமைந்தது. இதையடுத்து தொடர்ந்து அடுத்தடுத்தப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் கார்த்தி. தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி 26 மற்றும் பிரேம்குமார் இயக்கத்தில் கார்த்தி 27 ஆகிய படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார் கார்த்தி. இதில் கார்த்தி 27 படத்தின் சூட்டிங் விரைவில் எண்ட் கார்ட் போடப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நடிகர் அரவிந்த் சாமி மற்றும் ராஜ்கிரண் ஆகியோர் கார்த்தியுடன் இணைந்துள்ளனர். பிரபல சீரியல் நடிகை ஸ்வாதியும் படத்தில் இணைந்துள்ளார்.

கார்த்தி 27 படம்: இதனிடையே, சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துவரும் கார்த்தி 27 படத்தின் சூட்டிங் தற்போது மதுரையில் நடந்து வருகிறது. இந்தப் படத்தின்மூலம் நடிகை ஸ்ரீதிவ்யா மீண்டும் கார்த்திக்கு ஜோடியாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சில வாரங்களில் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே நடிகர் கார்த்தி -பிஎஸ் மித்ரன் காம்பினேஷனில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த சர்தார் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான பூஜை நாளைய தினம் சென்னையில் நடக்கவுள்ளது. ஆனால் படத்தின் சூட்டிங் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில்தான் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கார்த்தியுடன் இணைந்த ஸ்ரீதிவ்யா: கார்த்தி 27 படத்தில்தான் தற்போது அவர் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். குடும்ப சென்டிமெண்டை மையமாக கொண்டு உருவாகிவரும் இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடியே இல்லை என்று முன்னதாக கூறப்பட்டது. ஆனால் தற்போது படத்தில் ஸ்ரீதிவ்யா இணைந்துள்ளார். ஆனால் கார்த்திக்கு ஜோடியாக ஸ்வாதி தான் நடித்துவருவதாக கூறப்படுகிறது. படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடைந்து படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஜப்பான் படம் கார்த்திக்கு கைக்கொடுக்கவில்லை என்றபோதிலும் அடுத்தடுத்தப் படங்கள் அவருக்கு சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

கைதி 2 படம்: இந்தப் படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜின் கைதி 2 உள்ளிட்ட படங்களையும் கார்த்தி கமிட் செய்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் முன்னதாக வெளியான கைதி படம் மிகச்சிறப்பாக அமைந்தது. ஒரே இரவில் நடக்கும்படியாக இந்தப்படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்திருந்தார் கார்த்தி. தற்போது தலைவர் 171 படத்தை கவனம் செலுத்திவரும் லோகேஷ் கனகராஜ் ஏப்ரல் மாதத்தில் சூட்டிங்கை திட்டமிட்டுள்ளார். இந்தப் படத்தை தொடர்ந்து கைதி 2 படத்தை அவர் இயக்குவார் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X