Actor Karthi: கார்த்திக்கு தங்கையாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா.. அப்ப ஜோடி இல்லையா?
சென்னை: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் ஒரு படத்தை இயக்கி விட்டால் அந்த இயக்குனர் கோலிவுட்டில் அடுத்தடுத்து பெரிய நடிகர்களுடன் இணையும் வாய்ப்பை பெறுவார் என்பது கோலிவுட்டில் ஒரு சென்டிமென்டாக உள்ளது. அந்த வகையில் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட பலரையும் உதாரணம் காட்டுகின்றனர். கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியான பொன்னியின் செல்வன் 2, ஜப்பான் படங்களில் பொன்னின் செல்வன் 2 அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படம் மிகுந்த எதிர்பார்ப்புக்கிடையில் கடந்த தீபாவளியையொட்டி வெளியானது.
ஜப்பான் படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் சொதப்பியது. படத்தின் வசூலும் எதிர்பார்த்த அளவில் கிடைக்கவில்லை. இந்நிலையில் தற்போது கார்த்தி 26 மற்றும் கார்த்தி 27 படங்களில் கார்த்தி முழுக்கவனம் செலுத்தி வருகிறார். இதில் கார்த்திக் 26 படத்தை நலன் குமாரசாமியும் கார்த்திக் 27 படத்தை இயக்குனர் பிரேம்குமாரும் இயக்கி வருகின்றனர். கார்த்திக் 27 படத்தை நடிகர் சூர்யா தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. பேமிலி சென்டிமெண்ட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தில் அரவிந்த் சாமி, ஸ்வாதி கொண்டே மற்றும் ஸ்ரீதிவ்யா ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர்.

நடிகர் கார்த்தி: நடிகர் கார்த்தி அடுத்தடுத்து முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து வெற்றிப்படங்களை கொடுத்து வருகிறார். வளர்ந்து வரும் இயக்குனர்களும் கார்த்தியின் நடிப்பில் அடுத்தடுத்த படங்களை இயக்கும் வாய்ப்புகளை பெற்று வருகின்றனர். கார்த்தியின் படங்கள் என்றால் கண்டிப்பாக மினிமம் கேரன்டி சக்சஸ் இருக்கும் என்பது தொடர்ந்து காணப்படுகிறது. அந்த வகையில் இவரது விருமாண்டி, சர்தார், பொன்னியின் செல்வன், பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெற்றிப்படங்களாக அமைந்தன. ஆனால் கடந்த தீபாவளியையொட்டி இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வெளியான ஜப்பான் படம் சொதப்பலாக அமைந்தது.
கார்த்தி 27 படம்: இந்த படத்திற்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்த நிலையில் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய தவறியது. இந்நிலையில் அடுத்தடுத்து கார்த்தி 26 படத்தில் நலன் குமாரசாமி இயக்கத்திலும் கார்த்தி 27 படத்தில் 96 பட இயக்குனர் பிரேம்குமார் இயக்கத்திலும் கார்த்தி நடித்து வருகிறார். இதில் பிரேம்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் கார்த்தி 27 படத்தை அவரது அண்ணன் சூர்யா தனது 2டி என்டர்டைன்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்து வருகிறார். இந்த படத்தின் சூட்டிங் கும்பகோணம், காரைக்குடி ஆகிய இடங்களில் நடத்தப்பட்டுள்ளது.
சில தினங்களில் சூட்டிங் நிறைவு: வரும் 22 ஆம் தேதிக்குள் கார்த்தி தொடர்பான ஷூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டு விடும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தில் கார்த்தியுடன் அரவிந்த்சாமி முக்கியமான கேரக்டரில் நடித்துள்ளார். அவர் இந்த படத்தில் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஃபேமிலி சென்டிமெண்ட்டை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சீரியல் நடிகை ஸ்வாதி கொண்டே முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். இதே போல இந்த படத்தில் முன்னதாக கார்த்திக்கு ஜோடி இல்லை என்று கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது படத்தில் ஸ்ரீதிவ்யா நாயகியாக இணைந்துள்ளார்.
தங்கையாக நடிக்கும் ஸ்ரீதிவ்யா: ஸ்ரீதிவ்யாதான் கார்த்திக்கு ஜோடி என்று முன்னதாக கருதப்பட்ட நிலையில் அவர் தற்போது கார்த்தியின் தங்கையாக நடித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன, இந்த இரு படங்களை நடித்து முடித்து விட்டு அடுத்ததாக சர்தார் 2 படத்தில் இணைய உள்ளார் கார்த்தி. இந்த படங்களை தொடர்ந்து தீரன் அதிகாரம் ஒன்று 2, கைதி 2 ஆகிய படங்களிலும் அவர் அடுத்தடுத்து நடிப்பார் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளுக்கு பிசியாக இருக்கும்வகையில் அடுத்தடுத்த கமிட்மெண்ட்களை கார்த்தி தொடர்ந்து செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











