'நம்ம செவனாண்டி பெத்த பொண்ணா இது? ஆச்சரியமா இருக்கே..' ஊதா கலரு ரிப்பனை அப்படி வியக்கும் ரசிகர்கள்

By

சென்னை: நடிகை ஶ்ரீதிவ்யா வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றன.

நடிகை ஶ்ரீதிவ்யாவை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது. லதா பாண்டி என்றால் டப்பென்று நினைவுக்கு வந்துவிடுவார்.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக நடிப்பைத் தொடங்கிய இவர், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தார்.

பிரபலமானார் ஶ்ரீதிவ்யா

பிரபலமானார் ஶ்ரீதிவ்யா

இதில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி உட்பட பலர் நடித்திருந்தனர். இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து ஶ்ரீதிவ்யா கவனிக்கப்பட்டார். இதில் லதா பாண்டி என்ற பள்ளி மாணவி கேரக்டரில் நடித்திருந்தார். டி.இமான் இசையில் பாடல்களும் சூப்பர் ஹிட்டானதால், ஶ்ரீதிவ்யா பிரபலமானார்.

ஊதா கலரு ரிப்பன்

ஊதா கலரு ரிப்பன்

அதிலும் அந்த ஊதா கலரு ரிப்பன் பாடல், பட்டி தொட்டி எங்கும் அவரை கொண்டு சேர்த்தது. அடுத்து, சிவகார்த்திகேயனுடன் காக்கிச்சட்டை, ரெமோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், ஜி.வி. பிரகாஷ், கார்த்தி, விஷால், அதர்வா, விஷ்ணு விஷால் உட்பட பல நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.

சங்கிலி புங்கிலி

சங்கிலி புங்கிலி

தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த ஶ்ரீதிவ்யாவுக்கு பிறகு தமிழில் அதிக வாய்ப்பு கிடைக்கவில்லை. கடைசியாக ஜீவா, சூரி நடித்த சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தில் நடித்திருந்தார். மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு, இப்போது கவுதம் கார்த்திக் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

அதிக லைக்ஸ்

அதிக லைக்ஸ்

இதை பத்ரி வெங்கடேஷ் இயக்குகிறார். இதற்கிடையே, அதர்வாவின் ஒத்தைக்கு ஒத்த படத்திலும் நடிக்கும் ஶ்ரீதிவ்யா, அடிக்கடி இன்ஸ்டாவில் தனது புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அவர் இப்போது வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அதிகமான லைக்ஸ்களை அள்ளியுள்ளன.

செவனாண்டி பெத்த

செவனாண்டி பெத்த

சில நெட்டிசன்ஸ் அவர் அழகை அப்படி வர்ணித்துள்ளனர். சிலர், இவ்வளவு அழகை எங்கம்மா வச்சிருந்தே? என்று கேட்டுள்ளனர். ஒரு நெட்டிசன், நம்ம செவனாண்டி பெத்த பொண்ணா இது? என்று வருத்தப்படாத வாலிபர் சங்கம் ஞாபகத்தில் கலாய்த்திருக்கிறார்.

நிறைய வாய்ப்பு

நிறைய வாய்ப்பு

சிலர் நீங்க இயற்கையாவே செம அழகு என்றும் ஒரே ஒரு ஹாய் சொல்லுங்களேன் என்றும் கேட்டுள்ளனர். இன்னும் சிலர், இதே டிரெஸ்சில் இன்னும் எத்தனை போட்டோ வச்சிருக்கீங்க? என்று கேட்டிருக்கிறனர். சில நெட்டிசன்ஸ், இந்த வருஷம் உங்களுக்கு அதிக வாய்ப்பு கிடைக்க வாழ்த்துகள் என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X