மேக்கப் இல்லாமல் சிம்பிளா போஸ் கொடுத்த ஸ்ரீதிவ்யா.. எம்பூட்டு அழகு என வர்ணிக்கும் ரசிகர்கள்!

சென்னை : தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மற்றும் காக்கிச்சட்டை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ஸ்ரீதிவ்யா.

தனது க்யூட்டான நடிப்பினால் பெரும் ரசிகர்களை கொண்டுள்ள ஸ்ரீதிவ்யா தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கி வருகிறார்.

அதர்வாவுடன் இணைந்து ஒத்தைக்கு ஒத்த என்ற திரைப்படத்தில் நடித்து வரும் இவர் அவ்வப்போது வெளியிடும் மேக்கப் இல்லாத புகைப்படங்கள் வைரலாகி வருவதை தொடர்ந்து இப்பொழுது மீண்டும் ரசிகர்களை அசர வைக்கும் வகையில் சில போட்டோக்களை பகிர்ந்து ரசிகர்களின் பாராட்டுகளைப் பெற்று வைரலாகி வருகிறார்.

ரசிகர்களை பித்து பிடிக்க

ரசிகர்களை பித்து பிடிக்க

அழகான முகம் அலட்டிக்கொள்ளாத நடிப்பு என திரைப்படங்களில் தனது க்யூட்டான நடிப்பின் மூலம் ரசிகர்களை பித்து பிடிக்க வைத்து வரும் நடிகை ஸ்ரீதிவ்யா தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிரபலமான நடிகையாக உள்ளார்.

கதாநாயகியாக அறிமுகம்

கதாநாயகியாக அறிமுகம்

தெலுங்கில் ஓரிரு திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா "மனசார" என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் படுத்தப்பட்டார்.

தன் பக்கம் இழுத்து

தன் பக்கம் இழுத்து

இந்நிலையில் தமிழில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் வெற்றிபெற்ற திரைப் படமான "வருத்தப்படாத வாலிபர் சங்கம்" திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகத்தை கொடுத்த இவர் தனது முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமா நடிப்பின் மூலம் பல கோடி ரசிகர்களை தன் பக்கம் இழுத்து பித்து பிடிக்க வைத்தார்.

பிரபலமானார்

பிரபலமானார்

வருத்தப்படாத வாலிபர் சங்கம் திரைப்படத்திற்குப் பிறகு இவரது ரசிகர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போக அடுத்தடுத்து தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானார்.

வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது

வெளியாக காத்துக்கொண்டிருக்கிறது

ஜீவா, வெள்ளைக்கார துரை, காக்கிச்சட்டை, மாவீரன் கிட்டு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து வந்த ஸ்ரீதிவ்யா "சங்கிலி புங்கிலி கதவ தொற" திரைப்படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப் படங்களிலும் நடிக்காமல் இப்பொழுது கையில் "ஒத்தைக்கு ஒத்த" திரைப்படம் மட்டுமே வெளியாக காத்துக் கொண்டிருக்கிறது.

வெளியாக தாமதமாகி

வெளியாக தாமதமாகி

அதர்வா நடிப்பில் அதிரடி சண்டை காட்சிகளுடன் உருவாகியிருக்கும் "ஒத்தைக்கு ஒத்த" திரைப்படத்தில் மாறுபட்ட கதாபாத்திரம் ரசிகர்களை மிக விரைவில் கவர உள்ள நிலையில் இந்த திரைப்படம் வெளியாக தாமதமாகி வருகிறது.

தொடர்ந்து பின்பற்றி

தொடர்ந்து பின்பற்றி

இவரது திரைப்படங்கள் சில ஆண்டுகள் வெளியாகாத போதும் இவரை மறக்காத ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இவரை தொடர்ந்து பின்பற்றி வரும் நிலையில் ஸ்ரீதிவ்யா அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

ரசிகர்களின் பாராட்டுக்களை

ரசிகர்களின் பாராட்டுக்களை

இந்த வகையில் சமீப காலமாக ஹீரோயின்கள் பலரும் மேக்கப்புடன் படு கிளாமரில் இருக்கும் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து வரும் நிலையில் ஸ்ரீதிவ்யா அப்படி மேக்கப் ஏதும் அணியாமல் கவர்ச்சி எதுவும் காட்டாமல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் பாராட்டுக்களை தொடர்ந்து பெற்று வருகிறார்.

Recommended Video

Quarantine Notties |Trisha | Athulya Ravi | Sri Devi | Alya Manasa |Lock Down
க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில்

க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில்

இந்நிலையில் இப்பொழுது சிம்பிளான பாவாடை தாவணியில் மொட்டை மாடியில் உட்கார்ந்து கொண்டு பல்வேறு க்யூட்டான எக்ஸ்பிரஷன்களில் ரசிக்க வைக்கும் வகையில் எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு எக்கச்சக்கமான ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று மீண்டும் வைரலாகி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X