“உவ்வே.. ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது”.. என் ஜி கே பற்றி பிரபல நடிகை சர்ச்சை பதிவு!
என் ஜி கே படத்தில் ரகுலின் நடிப்பைப் பார்த்தால் வாந்தி வருவதாக ஸ்ரீ ரெட்டி தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: சூர்யாவின் என் ஜி கே படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என விமர்சித்துள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் என் ஜி கே. நேற்று ரிலீசான இப்படத்தில் சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நாயகியாக நடித்துள்ளனர். கலவையான விமர்சனங்கள் இப்படத்திற்கு கிடைத்து வருகிறது.
இந்நிலையில், சர்ச்சைகளுக்குப் பேர் போன நடிகை ஸ்ரீ ரெட்டி, என் ஜி கே பற்றி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில், ரகுலின் நடிப்பை அவர் மோசமாக விமர்சித்துள்ளார். அதாவது படத்தில் ரகுலைப் பார்த்தால் வாந்தி வருகிறது என அவர் தெரிவித்துள்ளார்.

சாய் பல்லவிக்கு பாராட்டு:
அதோடு அந்தப் பதிவில் சாய் பல்லவியின் நடிப்பை அவர் பாராட்டியுள்ளார். ரௌடி பேபியின் நடிப்பு நன்றாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். ஆனால், இந்தப் பதிவில் என் ஜி கே என்பதற்குப் பதிலாக ஒய் ஜி கே எனப் பதிவிட்டுள்ளார் ஸ்ரீ ரெட்டி. இதனை கமெண்டில் ரசிகர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். மற்றொரு பதிவில் ரகுலை ஆபாசமாக அவர் வர்ணித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் பேட்டி:
ரகுலைப் பற்றி ஸ்ரீ ரெட்டி இப்படி பேசுவது இது முதன்முறையல்ல. ஏற்கனவே, தெலுங்கு திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகமாக இருப்பதாக ஸ்ரீ ரெட்டி புகார் கூறியபோது, பேட்டியொன்றில் ரகுல், ‘எனக்கு அப்படி எதுவும் நடக்கவில்லை. படுக்கைக்கு அழைத்தால் செல்வதும், செல்லாததும் நம் கையில் உள்ளது. திறமை தான் முக்கியம்' எனத் தெரிவித்திருந்தார்.
ஆண்ட்ரியாவும் ஒப்பீடு:
இதனால் கோபமடைந்த ஸ்ரீ ரெட்டி, ரகுலை கேவலமாகத் திட்டி அப்போதே பேட்டியும் கொடுத்திருந்தார். அப்போது தனக்கு சாதகமாக பேசிய ஆண்ட்ரியாவையும், ரகுலையும் ஒப்பிட்டு அவர் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்கள் கவலை:
பேஸ்புக்கிலேயே இப்படிப் பல சர்ச்சைப் பதிவுகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வரும் ஸ்ரீ ரெட்டி, பிக் பாஸ் வீட்டிற்குள் வந்தால் இன்னும் என்னென்ன செய்வாரோ என்ற கவலை இப்போதே ரசிகர்களுக்கு வந்து விட்டது.


Click it and Unblock the Notifications