மோசமான போட்டோ.. அதைவிட மோசமான கேப்ஷன்.. பவன் கல்யாணை வச்சு செய்யும் ஸ்ரீரெட்டி!
சென்னை: நடிகர் பவன் கல்யாணை டேமேஜ் செய்யும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி ஷேர் செய்துள்ள பதிவு பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் பவன் கல்யாண்.
ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியின் தலைவராகவும் உள்ளார் பவன் கல்யாண்.

பல முகங்கள்
இவரை ரசிகர்கள் பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். பவன் கல்யாண் நடிகராக மட்டுமின்றி ஸ்க்ரீன் ரைட்டர், ஸ்டன்ட் கோ ஆர்டினேட்டர், அரசியல்வாதி என பல முகங்களை கொண்டுள்ளார்.

கொரோனா உறுதி
பொதுமக்கள் மட்டுமின்றி தொழிலதிபர்கள் திரைத்துறை பிரபலங்கள் என பலரும் அவருக்கு ரசிகர்களாக உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

வீட்டில் தனிமை
கொரோனா பாதிப்பை தொடர்ந்து பவன் கல்யாண் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். இந்நிலையில் அவரை டேமேஜ் செய்யும் வகையில் நடிகை ஸ்ரீரெட்டி தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை ஷேர் செய்துள்ளார்.

முகம் சுளிக்க வைத்துள்ளது
அதாவது நடிகர் பவன் கல்யாணை தனது மடியில் படுக்க வைத்துள்ளது போன்ற ஒரு போட்டோவை ஷேர் செய்துள்ளார். அந்த போட்டோவுக்கு அவர் கொடுத்துள்ள கேப்ஷன் பலரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

ஆக்ஸிஜன் கொடுத்தேன்..
அதாவது, என்னுடைய பெரிய மார்பில் இருந்து அவருக்கு அதிகளவான ஆக்ஸிஜன் கொடுத்தேன். இப்போது அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டார். எனக்கு நன்றி சொல்லுங்கள்.. எனக்கு என்னுடைய எதிரி தேவை.. ஏனெனில் எனக்கு சண்டைபோட யாரும் இல்லை.. என பதிவிட்டுள்ளார்.

ஆபாசமாகவும் பச்சையாகவும்
ஆரம்பத்தில் இருந்தே ஸ்ரீரெட்டி நடிகர் பவன் கல்யாணை தரக்குறைவாக விமர்சித்து வருகிறார். தான் ஒரு பெண் என்பதையும் மறந்து ஆபாசமாகவும் பச்சையாகவும் பேசி வருகிறார் நடிகை ஸ்ரீரெட்டி.
Recommended Video

அரை நிர்வாண போட்டோ
இந்நிலையில் அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், உங்களுக்கு வெட்கமே இல்லையா என கேட்டு கழுவி ஊற்றியுள்ளனர். அதேநேரத்தில் பலரும் அவர் அரை நிர்வாணமாக போராட்டம் நடத்திய போட்டோவை ஷேர் செய்து விளாசியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











