‘வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல’.. சாண்டி உங்க ஸ்டுடியோவுல ஸ்ரீரெட்டி என்ன பண்ணியிருக்காங்க பாருங்க!
ஸ்ரீரெட்டியின் டான்ஸ் வீடியோ ஒன்று வைரலாகியுள்ளது.
Recommended Video
சென்னை: நடன இயக்குனர் சாண்டியின் டான்ஸ் ஸ்டுடியோவில் நடிகை ஸ்ரீ ரெட்டி குத்தாட்டம் போடும் வீடியோ வைரலாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் முன்னணி நடன இயக்குனர்களில் மிகவும் முக்கியமானவர் சாண்டி. காலா படத்தில் ரஜினிக்கு நடனம் அமைத்ததால், மேலும் பிரபலமானார். இவர் தற்போது பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளார்.

பிக் பாஸ் வீட்டில் சாண்டி செய்யும் ரகளைகளுக்கு ஒரு பெரிய ரசிகர் கூட்டமே இருக்கிறது. சக போட்டியாளர்கள் கூட அவரிடம் நட்பாகவே இருக்கிறார்கள். கமல் உள்பட எல்லோருக்கும் பாடல் எழுதி கலக்கி வருகின்றனர் சாண்டியும், கவினும்.
இந்நிலையில் சாண்டியின் டான்ஸ் ஸ்டுடியோவில் தெலுங்கு நடிகை ஸ்ரீ ரெட்டி குத்தாட்டம் போடும் வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவில், ஒரு ஆணுடன் சேர்ந்து 'வெச்சுக்க வெச்சுக்கவா இடுப்புல... ஒரு பச்சக்கிளி சுத்துது என் அருகில' எனும் பாடலுக்கு நடனமாடுகிறார்.
ஸ்ரீ ரெட்டியின் இந்த நடன வீடியோவை ஏழரை லட்சத்துக்கு அதிகமானோர் பார்த்துள்ளனர். அதிகமாக ஷேர் செய்யப்பட்டும் வருகிறது. சாண்டி மாஸ்டர் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது, அவருடைய டான்ஸ் ஸ்டுடியோவில் ஸ்ரீ ரெட்டி குத்தாட்டம் போட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











