சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி.. எனக்கு எல்லாமே நீங்கள்தான் என உருக்கம்

சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.

Recommended Video

சந்தோசமான விஷயம் சொன்ன Sri Reddy | Silk Smitha Biopicல் நடிக்கிறேன்

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. தெலுங்கானாவை பூர்விகமாக கொண்ட ஸ்ரீரெட்டி பட வாய்ப்புகளுக்காக பலருடன் படுக்கையை பகிர்ந்தார்.

ஆனால் தன்னை பயன்படுத்தியவர்கள் யாரும் தனக்கு பட வாய்ப்பு தராமல் போனதால், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஸ்ரீரெட்டி கடுப்பானார்.

அரை நிர்வாண போராட்டம்

அரை நிர்வாண போராட்டம்

இதன் தொடர்ச்சியாக மேலாடையை கழட்டி போராட்டம் நடத்தி தனக்கு நீதி கேட்டார். மேலும் தன்னை ஏமாற்றியவர்கள் என தெலுங்கு மற்றும் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரின் பெயரையும் வெளியிட்டு விளாசி தள்ளினார்.

பேஸ்புக்கில் சுறுசுறுப்பு

பேஸ்புக்கில் சுறுசுறுப்பு

தொடர்ந்து பேஸ் புக்கில் சுறுசுறுப்பாக உள்ள ஸ்ரீரெட்டி, செக்ஸியாக பேசவும் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டும் வருகிறார். அவ்வப்போது தான் சமையல் செய்யும் வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்.

சில்க் ஸ்மிதா பயோபிக்

சில்க் ஸ்மிதா பயோபிக்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஒரு சர்ப்ரைஸ் இருப்பதாக கூறி வந்த ஸ்ரீரெட்டி, இன்று ஒரு வீடியோவை வெளியிட்டு அந்த சர்ப்ரைஸை வெளிப்படுத்தியுள்ளார். அதாவது, மறைந்த கவர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

எனக்கு யார் இருக்கிறார்கள்?

எனக்கு யார் இருக்கிறார்கள்?

இந்தப் படத்தை விளம்பரப் பட இயக்குநரான மது இயக்கவுள்ளார் என்றும் இந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழில் ரிலீஸ் ஆகும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் உங்களிடம்தான் நான் இதை சொல்ல வேண்டும், எனக்கு உங்களை விட்டால் யார் இருக்கிறார்கள் என்றும் கேட்டுள்ளார்.

ஆசிர்வாதம் செய்யுங்கள்

ஆசிர்வாதம் செய்யுங்கள்

அதோடு எனக்கு அப்பா அம்மா எல்லாமே நீங்கள் தான். இந்தப் படம் எந்த பிரச்சனையும் இன்றி நல்லபடியாக முடிந்து வெளியே வரவேண்டும் என்று ஆசிர்வாதம் செய்யுங்கள் என்றும் தெரிவித்துள்ளார் ஸ்ரீரெட்டி. இதில் முழுக்க முழுக்க தமிழில் பேசியுள்ளார் ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டியின் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X