கவலைப்படாதீங்க.. உங்க புருஷன் உங்கள நல்லா பாத்துப்பாரு.. அமலா பாலுக்கு ஆறுதல் கூறிய சர்ச்சை நடிகை!

சென்னை: சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி, ஹோம் குவாரண்டைனில் உள்ள நடிகை அமலா பாலுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

Recommended Video

Day:2 | Chaithra Reddy into Yoga | Manimegalai funny video

சர்ச்சைகளுக்கு பெயர் போனவர் நடிகை ஸ்ரீரெட்டி. ஸ்ரீரெட்டி என்றதுமே நினைவுக்கு வருவது அவரது நிர்வாண போராட்டமும் சினிமா பிரபலங்கள் மீது அவர் கூறிய குற்றச்சாட்டுக்களும்தான்.

சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ளார். அவ்வப்போது ஃபேஸ்புக் லைவில் ரசிகர்களுடன் பேசி வருகிறார் ஸ்ரீரெட்டி.

மோசமான கேப்ஷன்

மோசமான கேப்ஷன்

அதோடு தனது கவர்ச்சியான போட்டோக்களை ஷேர் செய்து மோசமான கேப்ஷன்களை கொடுத்து வருகிறார். அதோடு மற்ற நடிகை நடிகர்களையும் விளாசி வருகிறார். ரசிகர்கள் எவ்வளவு சொல்லியும் கேட்காத ஸ்ரீரெட்டி தன்பாட்டுக்கு வாய்க்கு வந்ததையெல்லாம் பேசி மற்ற நடிகர்களை வீண் வம்பிழுத்து வருகிறார்.

நல்லா பாத்துக்குவார்

நல்லா பாத்துக்குவார்

வழக்கமாக நடிகை ஸ்ரீரெட்டி யார் மீதாவது குறை கூறவும் மற்றவர்களை கேவலப்படுத்தியும்தான் ஃபேஸ்புக்கில் கருத்துக்களை பதிவிட்டு வருவார். இந்நிலையில் நடிகை அமலா பாலுக்கு ஆதரவாக கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அவர் தெரிவித்திருப்பதாவது, கவலைப்படாதீங்க அமலா பால், உங்களின் பஞ்சாபி கணவர் உங்களை நன்றாக பார்த்துக்கொள்வார். எனக்கு பஞ்சாபிஸ் மீது நம்பிக்கை உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவது திருமணம்

இரண்டாவது திருமணம்

திடீரென நடிகை ஸ்ரீரெட்டி அமலா பாலுக்கு ஆதரவாக இவ்வாறு கருத்து தெரிவித்திருப்பது குழப்பதை ஏற்படுத்தியுள்ளது. நடிகை அமலா பால் பாவ்னிந்தர் சிங் என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். இதுதொடர்பான போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

ஹோம் குவாரண்டைன்

ஹோம் குவாரண்டைன்

திருமணத்தின் போது அமலா பால் தனது கணவருக்கு லிப் டூ லிப் முத்தம் கொடுத்தார். இந்த போட்டோக்களும் வைரலானது. ஆனால் தனது திருமணம் குறித்து அமலா பால் இதுவரை வாய்திறக்கவில்லை. இதனை தொடர்ந்து 21 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்ததால் ஹோம் குவாரண்டைனில் தன்னை தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார் அமலா பால்.

இருவருக்குள்ளும் பிரச்சனையா?

இருவருக்குள்ளும் பிரச்சனையா?

வீட்டு தனிமையில் உள்ள அமலா பால் பூனையுடன் விளையாடினார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் வெளியிட்டிருந்தார். இதனிடையே ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் தாயின் அன்பு மட்டும் தான் அன்கண்டிஷனல் லவ் என்று குறிப்பிட்டிருந்தார். இதனால் இருவருக்குள்ளும் ஏதாவது பிரச்சனையா என்று கேள்வி எழுந்தது. இந்நிலையில் ஸ்ரீரெட்டி இப்படி ஒரு கருத்தை கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X