மிட் நைட் பார்ட்டிகளில் பிரபல நடிகைகள் அடிக்கும் கூத்து.. பச்சை பச்சையாய்.. ஸ்ரீரெட்டி பகீர்!
சென்னை: தடை செய்யப்பட்ட போதைப் பொருளான கொக்கைன் பயன்படுத்தியது தொடர்பான தகவல்கள் அதைத் தொடர்ந்த கைது நடவடிக்கைகள் என மொத்த கோலிவுட் சினிமாவுமே பதட்டத்தில் உள்ளது. இந்த விவகாரத்தில் பெரிய நடிகர்களும் பெரிய நடிகைகளும் கூடிய விரைவில் சிக்குவார்கள் என்று பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது. இந்நிலையில் நடிகை ஸ்ரீரெட்டி அண்மையில் அளித்துள்ள பேட்டியில் பல திடுக்கிடும் தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
இது தொடர்பாக குமுதம் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், " இந்த போதைப் பொருள் பார்ட்டியில் நடிகர்கள் நடிகைகள் என பலரும் கலந்து கொள்கிறார்கள். அதுவும் பெரிய பெரிய நடிகைகள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் அந்த போதைப் பொருளை பயன்படுத்தும் முன்னர் சொல்லிக் கொள்வது, யாரும் சோகக் கதைகள் குறித்து பேச வேண்டாம், காதல் தோல்விகள் குறித்து பேசக்கூடாது, மகிழ்ச்சியான விஷயங்களை மட்டும் நினைக்க வேண்டும், எல்லோரும் ஜாலியாக இருக்க வேண்டும் என கூறிவிட்டு தான் அந்த போதைப் பொருளையே பயன்படுத்துவார்கள்.
நடிகைகள் கூத்து: போதைப்பொருள் உட்கொண்டவர்கள் சிரித்தால் சிரித்துக் கொண்டே இருப்பார்கள். அவர்களின் சிரிப்பை கட்டுப்படுத்த முடியாது. அதேபோல் நடிகைகள் இரவில் நடக்கும் பார்ட்டிகளில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு, மறுநாள் காலையில் கேவலமான நாற்றத்துடன் படப்பிடிப்பு தளத்திற்கு செல்வார்கள். இது தொடர்பாக சில நடிகைகள் குறித்து சில நடிகர்கள் " அவ வாய்ல கேவலமான நாத்தம் அடிக்கும். நல்லா குடிச்சிட்டு வருவா" என கூறியுள்ளார்கள்.

பகீர் காரணங்கள்: குறிப்பாக நடிகைகளும் போதைப் பொருளை உட்கொள்ள காரணமாக கூறுவது, அந்த போதைப் பொருளை எடுத்துக் கொண்டால் தோல் மிகவும் பளபளப்பாக இருக்கும் எனக் கூறுவார்கள். அதேபோல் இரண்டு மூன்று நாட்கள் தொடர்ந்து வேலை செய்தாலும் அவர்களுக்கு சோர்வாக இருக்காது. மிகவும் ஆக்டிவாக இருப்பார்கள். கண்களுக்கு கீழே வரக்கூடிய கருப்பு வளையங்கள் எதுவும் வராது. குறிப்பாக பசிக்காது. மிகவும் ஆக்டிவாக வேலை செய்ய முடியும். இரண்டு நாட்கள் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும் என்றால் கூட கொஞ்சம் கூட சோர்வாக இருக்காது. மிகவும் குறிப்பாக பசி இருக்காது. அதனால்தான் அவர்கள் படப்பிடிப்புத் தளத்திலேயே இந்த போதைப் பொருளை பயன்படுத்துகிறார்கள்.
த்ரிஷா - நயன்தாரா: போதைப்பொருளை பயன்படுத்திய பின்னர் அவர்களுக்கு சுற்றி என்ன நடக்கிறது என்று தெரியவே தெரியாது. அவர்கள் வேறு உலகத்தில் இருப்பது போல இருப்பார்கள். அவர்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்பது குறித்து தெரிந்து கொள்ள கொஞ்சம் கூட ஆர்வம் காட்ட மாட்டார்கள். போதைப் பொருள் உட்கொண்ட பின்னர் சிரிப்பு வந்தால் தொடர்ந்து சிரித்துக் கொண்டே இருப்பார்கள்" என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் நடிகை த்ரிஷா மற்றும் நயன்தாரா ஏன் இந்த விவகாரம் குறித்து எதுவும் பேசாமல் இருக்கிறார்கள். அவர்களுக்கு பணமும், பிசினஸ் தான் முக்கியம் இதனால் இந்த விவகாரத்தில் அவர்கள் தலையிட மாட்டார்கள். குறைந்த பட்சம் ரசிகர்களுக்காக கூட அவர்கள் ட்வீட் போட மாட்டார்கள். நயன்தாராவை லேடி சூப்பர் ஸ்டார் என்று கூறுகிறீர்கள் ஆனால் மீடூ விவகாரத்தின் போது பெண்களுக்காக ஒரு ட்வீட் போட்டு இருப்பாரா" எனக் கேள்வி எழுப்பியுள்ளார். அவரது இந்த பேட்டி பகீர் கிளப்பும் விதமாக உள்ளது.


Click it and Unblock the Notifications











