For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்ச்சை நாயகி ஸ்ரீரெட்டி... பேஸ்புக்கில் கவர்ச்சிப் படங்கள் ரிலீஸ் - ரசிகர்களை குஷிப்படுத்தவாம்

|
Actress Sri Reddy Dubsmash : மீண்டும் மீண்டும் ஒரு சர்ச்சை- வீடியோ

சென்னை: சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் கடமையே கண்ணாயிரமாக சில பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்த ஸ்ரீரெட்டி திடீரென ஒருசில கிளுகிளு புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு காவல் ஆணையர் அலுவலகம் முன்பு அரை நிர்வாணப் போராட்டம் நடத்தி, ஒட்டுமொத்த மீடியா உலகத்தையும் திரும்பி பார்க்கச் செய்த தைரியமான பெண்மணியாக காட்டிக்கொண்ட நடிகை ஸ்ரீரெட்டி, இப்போது தனது தீவர வாய்ப்பு தேடுதலை துரிதப்படுத்தி இருக்கிறார்.

Actress Sri Reddy publishes her sexy photos

பிரபலமான நடிகைகளை விட மக்கள் மத்தியில் சமீபத்தில் மிக வேகமாக பிரபலமடைந்தவர் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி. காரணம் தான் பல நபரிடம் ஏமாந்து விட்டதாக சில இயக்குனர் முதல் பிரபல நடிகர்கள் வரை அனைவரின் பெயரையும் டைம் டேபிள் போட்டு ஒவ்வொரு பதிவாக சமூக வலைத் தளத்தில் பதிவிட்டு சம்பந்தப்பட்டவர்களின் மானத்தை கப்பலேற்றி வந்தார்.

Actress Sri Reddy publishes her sexy photos

கவர்ச்சி காட்ட சொன்னால் காட்டுவேன். கதையில் அந்த மாதிரியான கண்ராவி காட்சிகள் இருந்தால் நடிக்க மாட்டேன், என்று பலரிடம் புலம்பி வந்தார். தான் நம்பி ஏமாந்தவர்களைப் பற்றி பேசிப் பேசி பிரபலம் ஆனது எல்லாம் திட்டமிட்டு செய்தது கிடையாது.

நடிகைகளை தொடர்ந்து பகீர் தகவல் வெளியிட்ட அமிதாப் பச்சன்: தவறான ரத்தத்தால் 75% கல்லீரல் பாதிப்பு!

எல்லாம் என் தலைவிதி என்று எத்தனை தடவை சொன்னாலும் தமிழில் மிகவும் பிரபல இயக்குனரான ராகவா லாரன்ஸ் முதல் பல நடிகர்களின் பெயரை குறிப்பிட்டு தன்னை ஏமாற்றிவிட்டதாக பதிவிட்டு பெரும் பிரளயத்தையே ஏற்படுத்திவிட்டார் நடிகை ஸ்ரீரெட்டி.

Actress Sri Reddy publishes her sexy photos

இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் மிகவும் கடமையே கண்ணாயிரமாக சில பதிவுகளை தொடர்ந்து பதிவு செய்து வந்த ஸ்ரீரெட்டி திடீரென ஒருசில கிளுகிளு புகைப்படங்களை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளார்.

எத்தனை நாளைக்கு தான், சும்மாவே எழுதிட்டு இருக்குறது. ரசிகர்களுக்கும் கொஞ்சம் மனதை ஆசுவாசப்பத்த உற்சாகப்படுத்த டானிக் வேண்டாமா. அதனால் தான் தற்போது அந்த கிளு கிளு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்பட தொகுப்பை பார்த்து சிலர் ரசிப்பதும், சிலர் ஏக்கப்பெருமூச்சு விடுவதும் இன்னும் சிலர் திட்டுவதுமாக கருத்துக்கள் வந்து கொண்டு இருக்கின்றன.

Actress Sri Reddy publishes her sexy photos

எதை பற்றியும் கவலை படாமல், நான் கடந்து வந்த பாதை எனக்கு தெரியும். சினிமாவில் எப்படி ஜெயிக்க வேண்டும் என்று தெளிவாக புரிந்து தான் ஒவ்வொரு செயலையும் நான் செய்கிறேன் என்று சொல்லி உள்ளார்.

சென்னை வளசரவாக்கத்தில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கி பல சினிமா ஆர்வலர்களை சந்திப்பது இப்போது ஸ்ரீரெட்டியின் அன்றாட வேலை. ஸ்ரீரெட்டி எடுக்கும் முயற்சிகள் வெற்றி பெறுமா, அல்லது புதுப்புது சர்ச்சைகள் வருமா என்பது காலம் தான் சொல்ல வேண்டும்.

English summary
Following a few posts on the social website, Sri Retti suddenly posted a few clicks of photos on his Facebook page to entice fans.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more