இந்தப் பக்கம் சமந்தா, அந்தப் பக்கம் நயன்தாரா.. புதிய போட்டோஷூட்டில் சர்ச்சை நடிகை.. ஃபேன்ஸ் கலாய்!
சென்னை: அந்த கால லுக்கில் பிரபல சர்ச்சை நடிகை வெளியிட்டுள்ள புதிய போட்டோஷூட் புகைப்படங்கள் வேகமாக பரவி வருகின்றன.
வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர், ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது.

வாய்ப்பு தருவதாகக் கூறி
அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப் படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார். தெலுங்கு சினிமாவில் ராணாவின் தம்பி அபிராம், நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார்.

ஏ.ஆர்.முருகதாஸ்
நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார். பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, பவன் கல்யாணை பற்றியும் பரபரப்பு புகார் கூறியிருந்தார்.

சமந்தா, த்ரிஷா
இவர் ஏதாவது பரபரப்பு கருத்துக்களை தனது சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டு வருவதை வழக்கமாக்கி இருக்கிறார். நடிகைகள் பற்றியும் அவ்வப்போது அதிரடி கருத்துகளை வெளியிட்டு வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், சமந்தா, நயன்தாரா, த்ரிஷா பற்றியெல்லாம் கூறியிருந்தார்.

டாப் ஹீரோக்கள்
கடந்த சில நாட்களுக்கு முன், தனது தகுந்த பாதுகாப்பு அளித்தால், போதைப் பொருள் பயன்படுத்தும் டாப் ஹீரோக்கள் பெயரை தெரிவிக்கத் தயார் என்று கூறி இருந்தார். தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களின் வீடுகளில் நடக்கும் பார்ட்டிகளில் போதைப் பொருள் பயன்படுத்தப்படுகிறது. அது இல்லாமல் பார்ட்டிகள் இல்லை என்று பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.

அரசர் காலத்தில்
இதற்கிடையே பின்னணி பாடகர் எஸ்.பி.பி மறைவுக்கு சத்தம் போடாமல் அஞ்சலி செலுத்திவிட்டு வந்த ஶ்ரீரெட்டி, அந்த புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளார். இந்நிலையில் அவர் புதிய போட்டோஷூட் ஒன்றை நடத்தி உள்ளார். அதில், ஒரு போட்டோவில், நான் அரசர் காலத்தில் இருந்தால், இப்படித்தான் இருந்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

நயன்தாரா மாதிரி
அந்தப் போட்டோ, பழங்கால லுக்கில் இருக்கிறது. இதற்கு ரசிகர்கள் ஜாலியான கருத்துக்களை தெரிவித்துள்ளனர். ஒருவர் இந்த பக்கம் பார்த்தா சமந்தா, அந்தப் பக்கம் பார்த்தா நயன்தாரா மாதிரி இருக்கீங்க என்று கூறியுள்ளார். சிலர், அந்த காலம்னா, சந்திரமுகியா இருந்திருப்பீங்களோ? என்று கலாய்த்துள்ளனர்.

எப்படி இருந்தாலுமே
எந்த காலத்திலும் நீங்க தேவதை போலவே இருப்பீங்க என்று சிலர் ஓவராக வழிந்துள்ளனர். மற்றொரு போட்டோவுக்கு கேப்ஷனாக, நான், ஒல்லி ஹாட்டான பிறகு எடுத்த போட்டோஷூட் என்று கூறியுள்ளார். இதற்கு, நீங்க, ஒல்லியா இருந்தா என்ன, ஹாட்டா இருந்தா என்ன, எப்படி இருந்தாலுமே அழகுதான் என்று நெட்டிசன்ஸ் கூறியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











