Rajinikanth: யோகி ஆதித்யநாத் காலில் ரஜினிகாந்த் விழவில்லை.. ஸ்ரீரெட்டி ட்வீட்.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கினார் என பெரும் பரபரப்பு ஒரு பக்கம் பற்றி எரிந்துக் கொண்டிருக்கும் நிலையில், ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழவில்லை என நடிகை ஸ்ரீரெட்டி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களின் கவனத்தை கவர்ந்துள்ளது.
நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம் ஒரு பக்கம் 500 கோடி வசூல் சாதனையை செய்து விட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இன்னொரு புறம் ரஜினிகாந்த் செய்த செயல் சரியானது அல்ல என்றும் யோகி காலில் அவர் விழுந்திருக்கக் கூடாது என கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
யோகி காலில் ரஜினி விழவில்லை: தெலுங்கு மற்றும் தமிழ் திரையுலக நடிகர்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அடுக்கி சர்ச்சையை கிளப்பிய ஸ்ரீரெட்டி தற்போது ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் விஷயத்தில் தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
நடிகை ஸ்ரீரெட்டி பதிவிட்டுள்ள ட்வீட்டில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலில் விழவில்லை எனக் குறிப்பிட்டு இருப்பது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
வணக்கம் மட்டுமே தெரிவித்தார்: நடிகர் ரஜினிகாந்த் யோகி ஆதித்யநாத் காலை தொட்டு வணங்கவில்லை என்றும் அவரது காலில் விழவில்லை என்றும் குறிப்பிட்டுள்ள நடிகை ஸ்ரீரெட்டி ஆன்மிகவாதியான யோகி ஆதித்யநாத்துக்கு மரியாதை செலுத்தும் விதமாக குனிந்து வணக்கம் தெரிவித்தார் என பதிவிட்டுள்ளார்.
அவரது ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் முட்டுக் கொடுக்கலாம். அதுக்குன்னு முழு பூசணிக்காயை சோத்துல மறைக்கலாமா என கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும், ரஜினிகாந்தும் ஆன்மிகவாதிதானே வயதில் சிறியவரான யோகி ஆதித்யநாத் ரஜினிகாந்த் முன்பாக குனிந்து வணக்கம் போட்டு இருக்கலாமே என்றும் நெட்டிசன்கள் ஸ்ரீரெட்டிக்கு கேள்வி மேல் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தொடர்ந்து ரஜினிகாந்த் ஹாஷ்டேக் டிரெண்டிங்கில் உள்ள நிலையில், பல பிரபலங்களும், நெட்டிசன்களும் இந்த விவகாரத்தில் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர். ரஜினிகாந்த் செய்தது பெரிய குற்றம் இல்லை என்றும் ரஜினியின் செயல் மன்னிக்க முடியாத குற்றம் என்றும் கருத்துக்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











