'என் இன்னொரு முகம் உனக்கு தெரியாது...' பிளாக்பெல்ட் நடிகைக்கு மிரட்டல்...ஶ்ரீரெட்டி மீது வழக்கு
Recommended Video
சென்னை: நடிகை ஒருவர் கொடுத்த புகாரை அடுத்து, சர்ச்சை நடிகை ஶ்ரீரெட்டி மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சினிமா வாய்ப்புக்காகப் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், தெலுங்கு சினிமாவில் இருப்பதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் நடிகை ஶ்ரீரெட்டி.
இவரது புகாரால் திரையுலகம் அதிர்ச்சி அடைந்தது. அதோடு தனக்கு வாய்ப்பு தருவதாக ஏமாற்றி சீரழித்ததாக சில நடிகர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டு அதிர்ச்சி அளித்தார்.

தமிழ் சினிமாவிலும்
தெலுங்கு சினிமாவின் நடிகர் ராணாவின் தம்பி அபிராம் டக்குபதி, நானி, கொரட்டலா சிவா, பவன் கல்யாண் உட்பட சிலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை வைத்தார். தெலுங்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் பலர் மீது பரபரப்பு புகார் கூறினார். நடிகர்கள் விஷால், ராகவா லாரன்ஸ், ஶ்ரீகாந்த், இயக்குனர்கள் ஏ.ஆர்.முருகதாஸ், சுந்தர்.சி உட்பட பலர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை அள்ளித் தெளித்தார்.

சிரஞ்சீவி
பிரபல தெலுங்கு ஹீரோ சிரஞ்சீவியையும் அவரது குடும்பத்தினரையும் பற்றி அதிரடியாக புகார் சொல்வதை வழக்கமாக கொண்டுள்ள ஶ்ரீரெட்டி, சமீபத்தில் பவன் கல்யாணை பற்றி மீண்டும் பரபரப்பு புகார் கூறியிருந்தார். பல இளம்பெண்களின் வாழ்க்கையை சூறையாடி யுள்ளதாக அவர் கூறியிருந்தார். சிரஞ்சீவி பற்றியும் அவர் பரபரப்பு புகார் கூறி இருந்தார்.

கராத்தே கல்யாணி
இந்நிலையில் பிரபல தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி. கராத்தேவில் பிளாக்பெல்ட் வாங்கியிருக்கும் இவர், காமெடி மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்துவருகிறார். நடிகை ஶ்ரீரெட்டி அபாண்டமாக குற்றம் சொல்வதாக இவர் கூறி வந்தார். இந்நிலையில், பேஸ்புக் லைவில் தோன்றிய ஶ்ரீரெட்டி, கராத்தே கல்யாணிக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியுள்ளார்.

இன்னொரு முகம்
அதாவது, 'உன்னை பெண் என்பதால் விடறேன். உனக்கு என்னோட ஒரு முகம்தான் தெரியும். என்னோட இன்னொரு முகத்தை பார்க்கணும்னு நினைச்சே, ரொம்ப மோசமாயிரும்' என்று மிரட்டல் விடுக்கும் விதமாக பேசியுள்ளார். இதையடுத்து கராத்தே கல்யாணி, ஐதராபாத் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார், ஶ்ரீரெட்டி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











