For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  மயிலாக தோகை விரித்த ஸ்ரீதேவி.. புகழின் உச்சம் தொட்ட திரைப்படங்கள்!

  |

  சென்னை : 4 வயதில் திரையுலகில் அறிமுகமாகி தனித் திறமையாலும் கவர்ந்து இழுக்கும் அழகாலும், கனகச்சிதமான நடிப்பாலும் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம் பிடித்தவர் ஸ்ரீதேவி .

  தமிழ் , தெலுங்கு, மலையாளம் , கன்னடம், இந்தி என அனைத்து மொழிகளிலும் தன்னுடைய வியக்கவைக்கும் நடிப்பால் ரசிகர்களை தனது கைக்குள் வைத்துக்கொண்டவர் ஸ்ரீதேவி.

  தன்னுடைய அபார நடிப்பால் துணைவன் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ரீதேவி. எண்ணற்ற திரைப்படங்களில் நடித்து புகழின் உச்சிக்கு சென்றார். இன்று வரை அவரது பெயர் பட்டி தொட்டி எங்கும் நிலைத்து உள்ளது. அப்படி அவருக்கு பெயரும், புகழும் பெற்றுத் தந்த சில முக்கிய திரைப்படங்களை இப்போது பார்க்கலாம்..

  சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா சம்பத்.. தீயாய் பரவும் போட்டோஸ்!சுரேஷ் சக்கரவர்த்தி பேசும் போது நடுவிரலை காட்டினாரா அனிதா சம்பத்.. தீயாய் பரவும் போட்டோஸ்!

   தோகை விரித்த மயில்

  தோகை விரித்த மயில்

  16 வயதினிலே என்ற உடன் நினைவுக்கு வருவது, வனப்புடன் இருக்கும் ஸ்ரீதேவியின் முகம் தான். பத்தாவது பாசாகி டீச்சராக வேண்டும் என்ற கனவுடன்.. ஆத்தா.. நான் பாஸாகிட்டேன் என்று துள்ளிகுதித்து ஓடிவரும், மயிலாக தோகை விரித்து இருப்பார் ஸ்ரீதேவி. டாக்டரிடம் காதல் வயப்படும் போதும், ஏமாற்றப்பட்ட பின் வைராக்கிய உணர்வுடன் கிராமத்துப் பெண்ணாக காட்சிக்கு காட்சி தனது தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி, தான் ஒரு சிறந்த நடிகை என்பதை அனைவருக்கும் உணர்த்தினார்.

   சிறந்த நடிகை

  சிறந்த நடிகை

  காதலைக் கொண்டாடிய எத்தனையோ படங்கள் வந்திருந்தாலும் காதலைத் தாலாட்டிய படம் மூன்றாம் பிறை. விபத்தில் தன்னை பற்றிய நினைவை இழந்து 5 வயது சிறுமியாக விஜி என்ற கதாபாத்தில் ஏகமாக பொருந்தி இருப்பார் ஸ்ரீதேவி. நாய் குட்டி சுப்பிரமணியுடனும் கொஞ்சி விளையாடும் காட்சியில் குழந்தையாகவே மாறினார் ஸ்ரீதேவி. சீனி, விஜி இருவருக்கும் இடையேயான அழமான அன்பைப் சொல்லும் கதையாக அமைந்த, இப்படம் ஸ்ரீதேவிக்கு சிறந்த நடிகைக்கான விருதையும், ஏராளமான பாராட்டுக்களையும் பெற்றுத்தந்தது.

  பிரம்மிப்பு

  பிரம்மிப்பு

  கமல், ஸ்ரீதேவியின் அட்டகாசமான நடிப்பில் க்ரைம், த்ரில்லர் கதை தான் சிகப்பு ரோஜாக்கள் . கிராமத்து கதையை மட்டும்தான் பாரதிராஜா எடுப்பார் என்ற பெயரை மாற்றி அற்புதமான ஒரு சைக்கோ த்ரில்லர் கதையை உருவாக்கினார் பாரதிராஜா. இளம் பெண்களால் பாதிக்கப்பட்டு சைக்கோ கதாபாத்திரத்தில் கமலும், ஒரு சைக்கோ என தெரிந்த பின்னும் தன் காதலை துளியும் விட்டுக்கொடுக்காத காதலி கதாபாத்திரத்தில் நடித்து பிரம்மிக்க வைத்து இருப்பார் ஸ்ரீதேவி. பல காட்சிகளில் கண்களிலேயே பதபதைப்பையும், படபடப்பையும் ரசிகர்களுக்கு கொடுத்து நடிப்பில் மிரட்டி இருப்பார் ஸ்ரீதேவி. இப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றி நடை போட்டு ஸ்ரீதேவியின் புகழுக்கு மேலும் தீணிப்போட்டது.

   எதார்த்தமான நடிப்பு

  எதார்த்தமான நடிப்பு

  ரஜினியுடன் ஸ்ரீதேவி நடித்து வெற்றி பெற்றப்படம் தான் ‘நான் அடிமை இல்லை‘ இந்த படத்தில் காதலி, மனைவி என இரு கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார் ஸ்ரீதேவி. கணவன், குழந்தையை பிரிந்து மனம் நலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக அட்டகாசப்படுத்தி இருப்பார் ஸ்ரீ தேவி. இப்படத்தில் இடம் பெற்ற ‘ஒரு ஜீவன் தான் உன்பாடல் தான்‘ என்ற பாடலை, யப்பா என்னமா இளையராஜா இசையமைத்து இருக்கிறார் என்று உச்சு கொட்ட வைத்து ரசித்து கேட்கும் ரசிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். ஸ்ரீதேவியின் எதார்த்தமான நடிப்பு பெரும் வசூலை வாரிக்குவித்தது அவரின் புகழை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றது.

   மடிசார் மாமி

  மடிசார் மாமி

  திருமணமான கமல், அழகான மனைவியை விட்டு சபலத்தோடு நடிகையின் பின்னால் சுற்றுவதே ‘மீண்டும் கோகிலா‘வின் கதை. இதில், மடிசார் அணிந்து மடிசார் மாமியாக ஒரு குடும்பப் பெண்ணாக திரையில் வலம் வந்தார் ஸ்ரீதேவி. இந்த படத்தின் ஹை லைட்டே பெண் பார்க்கும் நேரத்தில், கமலை பார்க்க தயங்குவதும், சின்னஞ்சிறு வயதில் பாடலில் எதார்த்தமும் , இந்த படத்தை அடுத்த ஹிட்டடிக்க உதவியது என்று சொல்லலாம். வெட்கப்பட்டு தலைகுனிந்த காட்சியிலும், திருமணமான பின் கமலுக்கு ஆடர் போடும் நேரத்திலும் நடிப்பில் பல மைல்களை கடந்திருப்பார் ஸ்ரீதேவி.

   காமெடியும் வரும்

  காமெடியும் வரும்

  ரஜினி,ஸ்ரீதேவி, சில்க் ஸ்மிதா என பலரது நடிப்பில் உருவான அடுத்த வாரிசு படத்தில் சரளமாக மெட்ராஸ் பாஷை பேசி கலக்கி இருப்பார் ஸ்ரீதேவி. அந்த படத்தில் ‘அண்ணாத்த அண்ணாத்த‘ என்று அவர் கூப்பிடும் அழகே தனி ஸ்டைலாக இருக்கும். பல காட்சிகளில் எனக்கும் காமெடி சென்ஸ் உண்டு என்பது போல நகைக்சுவையிலும் தனது திறனை வெளிப்படுத்தி இருப்பார். ரஜினி மீது காதல் கொண்ட போதும், அதை வெளிப்படுத்த தயங்கும் நேரமும் நடிப்பின் அடுத்த நிலைக்கு சென்று இருப்பார் ஸ்ரீதேவி.

   அசாத்திய நடிப்பு

  அசாத்திய நடிப்பு

  குடும்ப சுமையை தாங்கும் பெண் கதாபாத்திரத்தில் பக்குவமாக பொருந்தி இருப்பார் ஸ்ரீதேவி. முதலில் கமலோடு நட்பு, பின் காதல் என அருமையாக நடித்திருப்பார். பல படங்களில் கமலோடு ஸ்ரீதேவி ஜோடி சேர்ந்து நடித்திருந்தாலும் இந்த படம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது என்று சொல்லலாம். ஸ்ரீதேவி நடிப்பில் உச்சம் பெற்றவர் என்றதை ‘ சிப்பி இருக்குது முத்தும் இருக்குது‘ என்ற ஒரே பாடலிலேயே என்னென்ற முகபாவங்களை வெளிப்படுத்தி தனது அசாத்தியமான திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் வேறு ஒரு உயரத்திற்கு அழைத்துச் சென்றிருப்பார் ஸ்ரீதேவி.

  English summary
  Actress Sridevi Best Hit Movies
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X