ஜான்வி கபூர் கட்டியிருக்கும் புடவையின் விலை என்ன தெரியுமா? வாயை பிளந்த ரசிகர்கள்!
சென்னை: ஸ்ரீதேவி மற்றும் போனி கபூரின் மகளான ஜான்வி கபூர், தற்போது இந்தியில் Sunny Sanskari Ki Tulsi Kumari என்கிற படத்தில் நடித்து வருகிறார். விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கும் இவர், கேரளாவிற்கு டூர் சென்ற போது அணிந்திருந்த வெள்ளை புடவை இணையத்தில்,டிரெண்டானது. பார்ப்பதற்கு சிம்பிளாக இருக்கும் அந்த புடவையின் விலையை கேட்டு பெண்கள் வாய் பிளந்து போனார்கள்.
தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்து கோலிவுட்டையே தனது கட்டுப்பாட்டில் வைத்தவர் நடிகை ஸ்ரீதேவி. தமிழ், தெலுங்கு சினிமாவில் இவர் ஜோடி போட்டு நடிக்காத நடிகர்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். இவர் பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்துகொண்டு மும்பையிலேயே செட்டில் ஆன நிலையில், சில வருடங்களுக்கு முன் துபாயில் உயிரிழந்தார்.

ஜான்வி கபூர்: அம்மா போலவே சினிமா மீது ஆர்வம் கொண்ட ஜான்வி கபூர், தடக் என்ற படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து கோஸ்ட் ஸ்டோரீஸ், ரோகி, குட்லக், ஜெர்ரி, மிலி உள்ளிட்ட சில படத்தில் நடித்தார். கடந்த ஆண்டு இவர் ஜூனியர் என்டிஆர் இரட்டை வேடத்தில் நடித்த தேவரா படத்தில் நடித்திருந்தார். இந்த படம் நல்ல வசூலை அள்ளியது. இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் நடிகர் அகில் அக்கினேனி நடிக்கும் தீரா என்ற படத்தில் ஜான்வி கமிட்டாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

நடிப்பு மட்டுமல்லாமல் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஜான்வி கபூர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார். குறிப்பாக ஜான்வி தனது காதலர் ஷிகர் பஹாரியாவுடன் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்து வருவது வழக்கம். அந்த வகையில், படப்பிடிப்பு இடைவேளையில் கேரளாவிற்கு டூர் சென்றுள்ளார். அப்போது அவர், சிம்பிளான ஒரு வெள்ளை புடவை அணிந்திருக்கிறார். அந்த புடவையைப் பார்த்த பெண்கள் அதன் விலை என்னவாக இருக்கும் என்று இணையத்தில் ஆய்வு செய்த போது, இந்த புடவை Anavila என்ற பிராண்டின் புடவை என்றும், வெள்ளை நிறத்தில் பார்க்க சிம்பிளாக தெரியும் இந்த புடவையின் விலை ரூ. 2 லட்சத்து 47 ஆயிரமாம்.



Click it and Unblock the Notifications











