'புடவை மாதிரி புருஷன மாத்துறா.. இனியாவது அடங்கணும்' வனிதா குடும்பத்தில் இருந்து ஒலித்த முதல் குரல்!
சென்னை: நடிகை வனிதாவின் திருமணங்கள் மற்றும் பிரேக்கப்புகள் குறித்து அவரது சகோதரியே விமர்சித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
நடிகை வனிதா முதலில் நடிகர் ஆகாஷை திருமணம் செய்தார். அவர் மூலம் ஒரு மகன் மற்றும் மகளுக்கு தாயானார்.
பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்தார் வனிதா. மகன் விஜய் ஸ்ரீ, அப்பாவுடனே செல்வதாக கூறி அவருடன் சென்றுவிட்டார்.

பெண் குழந்தைகள்
மகள் ஜோவிகா வனிதாவுடன் உள்ளார். அதன்பிறகு ஆந்திராவை சேர்ந்த ஆனந்த்ராஜன் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வனிதா. அவர் மூலம் ஒரு பெண் குழந்தையை பெற்றார். பின்னர் ஆனந்த்ராஜையும் விவாகரத்து செய்தார் வனிதா.

குடும்பத்துடன் தகராறு
பின்னர் சினிமா தயாரிப்பில் இறங்கிய வனிதா, டான்ஸ் மாஸ்டர் ராபர்ட்டுடன் டேட்டிங்கில் இருந்தார். அவருடனும் பிரேக்கப் ஏற்பட்டு பிரிந்தார் வனிதா. தனது குடும்பத்துடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார் வனிதா. இதனால் செய்திகளிலும் அடிபட்டு வந்தார்.

குக்கு வித் கோமாளி
கடந்த ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. இதன்மூலம் மீண்டும் பிரபலமானார். தொடர்ந்து குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றார் வனிதா. அதில் டைட்டில் வின்னரானார்.

மூன்றாவது திருமணம்
அதன்பிறகு சமையல் நிகழ்ச்சிக்கான யூடியூப் சேனலை தொடங்கினார் வனிதா. அதற்கு உதவியாக இருந்த விஷுவல் எடிட்டரான பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். கடந்த ஜூன் மாதம் வனிதா பீட்டர் பால் திருமணம் நடைபெற்றது.

ஏமாந்துவிட்டதாகவும்..
திருமணமாகி 4 மாதங்கள் கூட நிறைவடையாத நிலையில் வனிதா தனது கணவரான பீட்டர் பாலை பிரிந்து விட்டதாக கூறி வீடியோ வெளியிட்டார். பீட்டர் பால் மீண்டும் குடிக்கு அடிமையானதால் அவரை பிரிவதாக கூறினார். மேலும் அவரை நம்பி ஏமாந்து விட்டதாகவும் கதறினார்.

வனிதா குறித்து ஸ்ரீதேவி
இந்நிலையில் நடிகை வனிதாவின் திருமணம் மற்றும் பிரேக்கப்புகள் குறித்து அவரது சகோதரியான ஸ்ரீதேவி கூறியதாக சில தகவல்கள் ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.

ரொம்ப பாசம்
அதாவது, தான் வீட்டில் கடைசி பெண் என்பதால் வனிதா தன்னை அம்மாவை போன்று பார்த்துக் கொண்டதாகவும், தனக்கும் வனிதா மீது ரொம்ப பாசம் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

பல பிரச்சனைகள்..
எப்போது தான் நடித்த படம் ஹிட்டானதோ, அப்போதே வனிதா தன்னைப் பற்றியும் தனது மற்றொரு அக்காவான பிரீத்தா குறித்தும் வெளியே தவறாக பேச தொடங்கிவிட்டார் என்றும் கூறியுள்ளார். அதனாலேயே பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் கூறியுள்ளார் ஸ்ரீதேவி.

புடவையை மாற்றுவது போல்
மேலும் தற்போது தான் எந்த ஆதரவும் இல்லாமல் தனியாக இருக்கிறேன் என்று கூறி திருமணம் செய்து கொண்டார். அந்த திருமணமும் முறிந்துவிட்டது. புடவையை மாற்றுவது போல் புருஷனை மாற்றுகிறார் என்றும் இனியாவது அவரது பெண் குழந்தைகளுக்காக அடக்கமாக வாழ்ந்தால் நல்லா இருக்கும் என்றும் விளாசியுள்ளார் ஸ்ரீதேவி.

முதல் நபராக ஸ்ரீதேவி
சொத்துப் பிரச்சனை காரணமாக வனிதா, தனது குடும்பத்தினரை போலீஸ் ஸ்டேஷன் வரை இழுத்தார். இதனால் அவருடன் ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று இருந்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர். இந்நிலையில் வனிதாவின் திருமணம் குறித்து அவரது குடும்பத்தில் இருந்து முதல் நபராக நடிகை ஸ்ரீதேவி பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











