ஸ்ரீதேவியின் நீண்ட நாள் ஆசை.. ஜிம்மிற்கு போகாமல் எடை குறைத்த போனி கபூர்!

சென்னை: பிரபல பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூர் உடல் எடை குறைந்து மிகவும் ஸ்லிம்மாக மாறியுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கடுமையான உடற்பயிற்சிகள் எதையும் செய்யாமல், உணவுவை கட்டுப்படுத்தி தனது உடல் எடையை கிட்டத்தட்ட 26 கிலோ வரை குறைத்துள்ளார்.

80 காலகட்டத்தில் கொடி கட்டி பறந்த நடிகை ஸ்ரீ தேவி, தமிழ் தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து முன்னணி நடிகர்களுடனும் நடித்துள்ளார். தமிழில் கலக்கிக் கொண்டிருந்த ஸ்ரீதேவி பாலிவுட் சென்று, புகழின் உச்சத்தை தொட்டு, அந்த காலகட்டத்தில் அதிகம் சம்பளம் பெரும் நடிகையாக இருந்தார். இதைத்தொடர்ந்து,1996 ஆம் ஆண்டு தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள் உள்ளனர். ஸ்ரீ தேவி இறந்த பிறகு, தனது அம்மாவை போலவே இரண்டு மகள்களும் சினிமானில் என்ட்ரி கொடுத்து நடித்து வருகின்றனர்.

sridevi Boney Kapoor weight loss
Photo Credit:

தயாரிப்பாளர் போனி கபூர்: அதே போல, போனி கபூர், தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானார். பின்பு அஜித்தை வைத்து வலிமை, துணிவு உள்ளிட்ட படங்களையும் தயாரித்தார். உதயநிதி ஸ்டாலின் நடித்த நெஞ்சுக்கு நீதி, ஆர்.ஜே. பாலாஜி நடித்த வீட்ல விசேஷம் ஆகிய படங்களையும் தயாரித்துள்ளார். இந்நிலையில், போனி கபூர் உடல் எடை குறைந்து ஸ்லிம் லுக்கில் இருக்கும் போட்டோ ஒன்று இணையத்தில் டிரெண்டாகி உள்ளது. கடுமையான உடற்பயிற்சிகள் எதையும் செய்யாமல், உணவு கட்டுப்படுத்தியதன் மூலமாகவே உடல் எடையை 26 வரை குறைத்துள்ளார்.

உணவு கட்டுப்பாடு: இதைப்பார்த்த பலர் வாயை பிளந்து, இது எப்படி சாத்தியமானது என கேட்டதற்கு, உடல் எடை அதிகரிக்க உணவு பழக்கம் தான் முக்கிய காரணம். இதனால், நான் இரவு உணவு சாப்பிடுவதை முழுமையாக தவிர்த்து விட்டு, சூப் மட்டுமே குடித்தேன். காலையில், பழச்சாறு மற்றும் ஜவார் ரொட்டி போன்றவற்றை எடுத்துக்கொண்டேன். இதைத் தொடர்ந்து செய்து வந்ததால், எந்தவிதமான உடற்பயிற்சியும் செய்யாமல், உணவுக்கட்டுப்பாட்டின் மூலம் எடையை குறைத்துவிட்டேன் என்றார்.

ஸ்ரீதேவியின் ஆசை: மேலும், என் மனைவி ஸ்ரீ தேவி, எப்போதும், "நீங்கள் உடல் எடையை குறைத்தால் நன்றாக இருக்கும் என்று அடிக்கடி கூறுவார். அதே போல, நீங்கள் சிகை அலங்காரம் செய்து கொள்ளுங்கள், நான் உங்களை முதன்முதலில் சந்தித்தபோது, நீங்கள் ஸ்லிம்மாக, உயரமாக, நல்ல தோற்றத்துடன் இருந்தீர்கள், ஆனால், இப்போது இல்லை. முதலில் உடல் எடையை குறையுங்க, உடல் ஆரோக்கியம் தான் முக்கியம் என்று சொல்லிக்கொண்டே இருப்பார். அப்போது நான், "நீ என் வாழ்க்கையில் வந்த பிறகு எனக்கு வேறு என்ன வேண்டும்? நான் ஸ்லிம்மாக மாறினால், பல பெண்கள் என் மீது ஆசைப்படுவார்கள், என்னை சுற்றி வருவார்கள், அதற்காகத்தான் உடல் எடையை குறைக்க எந்த முயற்சியும் செய்யவில்லை என்று கிண்டலாக சொல்லுவேன். அதைக் கேட்டு ஸ்ரீதேவி சிரிப்பார். இப்போது உடல் எடையை குறைத்து ஸ்ரீதேவியின் ஆசை நிறைவேற்றி விட்டேன் என்று போனி கபூர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X