விக்ரம் உடன் டூயட் பாட கே.ஜி.எஃபி நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி ரெடி
Recommended Video
சென்னை: விக்ரம் 58 திரைப்படத்தில் நடிகர் விக்ரமுக்கு ஜோடியாக கே.ஜி.எஃப் திரைப்படத்தில் நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, ஸ்ரீநிதி ஷெட்டி விரைவில் விக்ரம் 58 படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
விக்ரம் 58 படத்தை வயாகாம் ஸ்டூடியோவுடன் இனைந்து லலித் குமாரின் செவன் ஸ்கிரீன் நிறுவனமும் இப்படத்தை தயாரிக்க உள்ளது. சமீபத்தில் வந்த தகவலின் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க போவதை படக்குழு அதிகார பூர்வமாக உறுதி செய்தது.

இப்படத்தின் இயக்குனர் அஜய் ஞானமுத்து தனது டீவிட்டர் பக்கத்தில் இர்பான் பதானுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதி செய்தார். கடாரம் கொண்டான் படத்துக்கு பிறகு நடிகர் சீயான் விக்ரம் நடிக்க இருக்கும் படத்திற்கு விக்ரம் 58 என தற்காலிகமான தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்து பின் டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் என இரண்டு வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இப்படத்தை இயக்குகிறார் என அதிகார பூர்வ தகவல் வெளியானது.
அதனைத் தொடர்ந்து இப்படத்தில் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானும் இனைகிறார் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. இது சீயான் விக்ரம் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்கள் இடையிலும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹாரர் திர்ல்லர், திர்ல்லர் என இரு படங்களையும் த்ரில்லர் ஜார்னரிலே இயக்கி இருந்தார் அஜய் ஞானமுத்து.

அதேபோல் இப்படமும் சீட் எட்ச் த்ரில்லராக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தில் முன்னதாக ப்ரியா பவானி சங்கர் கதாநாயகியாக தேர்வாகி இருந்தார் தற்போது அவர் கால்சீட் காரணங்களால் படத்தில் இருந்து விலகியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளன.
அதே சமயத்தில், கடந்த 2018ஆம் ஆண்டின் தேசிய விருது பெற்ற கே.ஜி.எஃப் படத்தில் நடிகர் யாஷுக்கு ஜோடியாக நடித்த ஶ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆகவே, ஸ்ரீநிதி ஷெட்டி விரைவில் விக்ரம் 58 படத்தில் இணைவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை என்பதனை காத்திருந்து பார்போம் .
இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் சிவகுமார் விஜயன். இவர் என்.ஜி.கே, இறுதி சுற்று படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர். இந்த படத்திற்கு பிறகு, விக்ரம் மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்க இருக்கிறார்.


Click it and Unblock the Notifications











