தளபதி ஒரு ஆர்ட்.. நெகிழ்ச்சியை வெளிப்படுத்திய கோப்ரா நாயகி!

சென்னை : நடிகர் விஜய் எப்போதுமே அனைவருக்கும் பிடித்தமான நடிகராகவே காணப்படுகிறார்.

தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட் நடிகர்களுக்கும் பிடித்தமான நடிகராக விஜய் உள்ளார்.

சர்வதேச அளவில் விஜய்க்கு ரசிகர்கள் காணப்படுவது அவரது மாஸை காட்டி வருகிறது. கோலிவுட்டிலும் அவர் தான் எப்போதும் முன்னணியில் உள்ளார்.

நடிகர் விஜய்

நடிகர் விஜய்

நடிகர் விஜய்யின் கோலிவுட் பயணம் சிறுவயதிலேயே துவங்கினாலும் நாளைய தீர்ப்பு படத்தில்தான் அவர் நாயகனாக அறிமுகமானார். கடந்த 1992ம் ஆண்டில் அவரது நாயகன் பயணம் துவங்கியது. இன்னும் இரு மாதங்களில் அவர் தனது 30வது ஆண்டை பூர்த்தி செய்யவுள்ளார். இதையொட்டி ரசிகர்கள் தற்போதே கொண்டாட்டங்களை துவங்கியுள்ளனர்.

30 ஆண்டு திரைப்பயணம்

30 ஆண்டு திரைப்பயணம்

இந்த முப்பது ஆண்டுகளில் இவர் தனது சோதனைகளை சாதனைகளாக்க போராடிய போராட்டம் கொஞ்சம் நஞ்சமல்ல. ஒவ்வொரு படிக்கல்லாக ஏறி தற்போது இந்த உயரத்தை அடைந்துள்ளார். தற்போது இவரை தளபதி என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அரசியலிலும் தன்னுடைய ரசிகர்களை ஈடுபடுத்தி வெற்றிக் கண்டுள்ளார்.

அனைவரது பேவரிட் நடிகர்

அனைவரது பேவரிட் நடிகர்

இதனிடையே தொடர்ந்து அடுத்தடுத்த மாஸ் படங்களில் நடித்து வருகிறார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமில்லாமல் பாலிவுட்டிலும் விஜய் தான் அனைவருக்கும் பேவரிட். இவரது ரசிகர் என்று கூறிக் கொள்வதில் அனைவருமே பெருமை கொள்கின்றனர். இவரது சிறப்புகளை தொடர்ந்து ஹைலைட் செய்து வருகின்றனர்.

ஸ்ரீநிதிக்கும் விஜய்தான் பேவரிட்டாம்

ஸ்ரீநிதிக்கும் விஜய்தான் பேவரிட்டாம்

அந்த வரிசையில் தற்போது இணைந்துள்ளார் கேஜிஎப் மற்றும் கோப்ரா படங்களில் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி. அவர் விஜய் ஒரு ஆர்ட் என்று புகழ்ந்து தள்ளியுள்ளார். மேலும் தனக்கு விஜய்யின் துப்பாக்கி படம்தான் மிகவும் பிடிக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து விஜய்யுடன் ஜோடி சேர அம்மணி இப்பவே காய் நகர்த்துகிறாரா என்று ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்

அடுத்தடுத்த சிறப்பான படங்கள்

நடிகை கேஜிஎப் படத்தில் யஷ் ஜோடியாக பிரஷாந்த் நீல் இயக்கத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதையடுத்து தற்போது கோப்ரா படத்திலும் விக்ரமின் ஜோடியாகியுள்ளார். இவர்கள் இருவரும் இணைந்து வரும் பாடல் மற்றும் காட்சிகள் மிகவும் சிறப்பாக அமைந்துள்ளன. இந்நிலையில் படத்தின் பிரமோஷன்களில் இவர் தொடர்ந்து பங்கேற்று வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X