Srinidhi shetty: கிச்சா -சேரன் கூட்டணியில் இணையும் ஸ்ரீநிதி ஷெட்டி.. என்ன சொல்லியிருங்காங்க தெரியுமா

சென்னை: நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர், தொகுப்பாளர், ஸ்கிரிப்ட் ரைட்டர், பின்னணி பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் கிச்சா சுதீப்.

கனனடத்தில் முன்னணி நடிகராக பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ள இவர் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.

தமிழிலும் இவரது நடிப்பில் நான் ஈ உள்ளிட்ட படங்கள் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. இதனிடையே மீண்டும் தமிழில் இவர் நேரடியாக நடிக்கவுள்ளார்.

Actress Srinidhi shetty joins as lady lead in Kiccha Sudheep -Cheran combination movie

சுதீப் -சேரன் கூட்டணியில் இணைந்த ஸ்ரீநிதி ஷெட்டி: நடிகர் கிச்சா சுதீப் கன்னட மொழியில் முன்னணி ஹீரோவாக ஏராளமான ஹிட் படங்களை கொடுத்துள்ளார். தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் இவர் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். தமிழில் சமந்தா, நானியுடன் கிச்சா சுதீப் இணைந்து நடித்திருந்த நான் ஈ படம், மிகப்பெரிய வெற்றியை பெற்றதுடன் சுதீப்பிற்கு ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தது. இந்தப் படத்தில் வில்லனாகவே நடித்திருந்தாலும் இவரது நடிப்பு ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மெண்டாக அமைந்தது.

நடிகர் கிச்சா சுதீப்: தொடர்ந்து தமிழில் சில படங்களில் நடித்துள்ள சுதீப், கன்னடத்தில் அடுத்தடுத்த வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். இதனிடையே, அடுத்ததாக இயக்குநர் சேரன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படம் கன்னடத்தில் உருவாகவுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இயக்குநர் சேரன் இயக்கவுள்ள புதிய படத்தில் சுதீப் நாயகனாக இணைந்துள்ளார். கடந்த 2019ம் ஆண்டில் சேரன் இயக்கி நடித்திருந்த திருமணம் படம் வெளியானது. இந்தப் படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அவர் படம் எதையும் இயக்கவில்லை.

சேரன் இயக்கத்தில் சுதீப்: இந்நிலையில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகவுள்ள புதிய படத்தில் கிச்சா சுதீப்பை லீட் கேரக்டரில் இயக்குநர் சேரன் டைரக்ட் செய்யவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்திற்கு கிச்சா 47 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் நாயகியாக ஸ்ரீநிதி ஷெட்டி இணைந்துள்ளார். இந்நிலையில் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, இந்த புதிய பயணத்திற்கு அனைவரது வாழ்த்துக்களையும் கோரியுள்ளார்.

Actress Srinidhi shetty joins as lady lead in Kiccha Sudheep -Cheran combination movie

பாட்ஷா கிச்சா சுதீப்: தனக்கு இந்த வாய்ப்பை வழங்கியுள்ள சத்யஜோதி பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் சேரனுக்கு தன்னுடைய சமூக வலைதளப்பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள ஸ்ரீநிதி ஷெட்டி, பாட்ஷா கிச்சா சுதீப்புடன் இணைந்து நடிப்பது குறித்து மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். முன்னதாக கேஜிஎப் படங்களில் நடித்ததன்மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றுள்ள ஸ்ரீநிதி ஷெட்டிக்கு இந்தப் படம் மேலும் சிறப்பாக கைக்கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actress Srinidhi shetty joins as lady lead in Kiccha Sudheep -Cheran combination movie

கேஜிஎப் படங்களில் அதிரடி: சமூக வலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவாக பல வீடியோக்களையும் புகைப்படங்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் ஸ்ரீநிதி. மேலும் நானியுடன் புதிய படம் ஒன்றிலும் கமிட்டாகியுள்ளார். முன்னதாக தமிழில் விக்ரமுடன் இணைந்து ஸ்ரீநிதி நடித்திருந்த கோப்ரா படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த போதிலும் ஸ்ரீநிதிக்கு தமிழில் நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கடந்த 2018ம் ஆண்டில் கேஜிஎப் படத்தில் யாஷ் ஜோடியாக அதிரடி கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X