தூது போகிறவர் எல்லாம் மாமாவா? அசிங்கமாக கமெண்ட் செய்த அர்ச்சனா.. விளாசும் பிரபல நடிகைகள்!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் ரியோவிடம் அனிதாவுக்கு தூதாக இருந்தார் என சோம சேகரை அர்ச்சனா அசிங்கமாய் கமெண்ட் செய்தற்கு பிரபல நடிகைள் இருவர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் தன்னை வொர்ஸ்ட் பர்ஃபாமர் என்று கூறி ஜெயிலில் தள்ளியதற்கு அனிதா கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அன்றே ரியோவிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். ரம்யாவிடமும் தனது பாயிண்ட்டுகளை எடுத்து கூறினார்.

சொடக்கு போட்டு ஆவேசம்
தொடர்ந்து கமலின் எபிசோடின் போது தன்னை ஜெயிலுக்கு அனுப்பியது அநியாயம் என்று ஆக்ரோஷமாக பேசினார். மேலும் தனி ஆளா நின்னு 12 பேருக்கு தனியா சமையல் செய்தேன் என சொடக்கு போட்டு பேசினார்.

ஜெயிலுக்கு அனுப்பப்பட்ட நிஷா
அவரது ஆக்ரோஷமான பேச்சை பார்த்து மொத்த ஹவுஸ்மேட்ஸும் அப்படியே அமைதி காத்தனர். இதன் பலனாக நிஷா ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார். ரியோ விளக்கம் கொடுத்தும் அதை ஏற்கவில்லை அனிதா.

கடும் வாக்குவாதம்
தொடர்ந்து கடந்த திங்கள் கிழமை ஓபன் நாமினேஷனின் போது கமல் எபிசோடில் அனிதா பேசியது குறித்து ரியோ விளக்கம் கொடுத்தார். இதன் தொடர்ச்சியாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது.

தூது சென்ற சோம்
இதனை தொடர்ந்து கார்டன் ஏரியாவில் அமர்ந்திருந்த அனிதா, அங்கிருந்த சோமிடம் நான் ரியோவிடம் பேச வேண்டும் அவரை வர சொல்லுங்கள் என்றார். பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற சோம், உன்னிடம் அனிதா பேச வேண்டுமாம் என்று ரியோவிடம் கூறினார்.

நீ என்ன மாமாவா?
இதனைக் கேட்ட அர்ச்சனா, நீ அதுக்கு தூதா? நீ என்ன மாமாவா? மாமா வேலை பார்க்குறியா என்று அசிங்கமாக கமெண்ட் செய்தார். அப்போதே சமூக வலைதளங்களில் அர்ச்சனாவின் இந்த பேச்சுக்காக கழுவி ஊற்றினர்.

தூது போகிறவரெல்லாம் மாமாவா?
இந்நிலையில் பிரபல நடிகையான ஸ்ரீபிரியா இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார். அதாவது தூது போகிறவர் எல்லாம் மாமாவா? என கேட்டு தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

நடிகை கஸ்தூரி கண்டனம்
நடிகை ஸ்ரீபிரியாவின் இந்த பதிவை பார்த்த நடிகை கஸ்தூரி,
அனுமன் வகையறானு சொல்லாம விட்டார்களே என தனது ஆதங்கத்தை பதிவிட்டுள்ளார். ஸ்ரீபிரியா மற்றும் கஸ்தூரியின் இந்த பதிவுகளுக்கு ரசிகர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலரும் அர்ச்சனாவின் உண்மை முகம் புலப்படுகிறது என பதிவிட்டு வருகின்றனர்.

அர்ச்சனாவுக்கு வன்மம்
அவர்களின் பதிவை பார்த்த இந்த நெட்டிசன், அர்ச்சனாவின் வன்மம் சோமிடம் எப்படி வெளிப்படுகிறது என்று பாருங்கள். சோம் , ரியோவிடம் "அனிதா ஏதோ சொல்லனுமாம், அதனால அனிதாகிட்ட அப்புறம் பேசு" என்று சாதாரணமாக சொன்னதிற்கே அர்ச்சனா இவ்வளவு வன்மத்தை கக்குகிறார் என்றால்? என கேள்விக் குறியோடு பதிவிட்டுள்ளார்.

நீ மானஸ்தனா?
தொடர்ந்து அனிதாவிடம் பேசிவிட்டு திரும்பிய ரியோ மீதும் ஸ்பிரே அடித்தார் அர்ச்சனா. அர்ச்சனா தொடர்ந்து தகாத வார்த்தைகளை பிக்பாஸ் வீட்டுக்குள் பயன்படுத்தி வருகிறார். மாமாவா நீ? மானஸ்தனா?எவ்வளவுக்கு விலை போன?
முறைமவன்? என பல வார்த்தைகளை பயன்படுத்தி வருகிறார்.

மியூட் செய்யப்படும் வார்த்தைகள்
மேலும் அடிக்கடி கெட்டவார்த்தைகளை அர்ச்சனா பேசுவதும் அது மியூட் செய்யப்படுவதும் வாடிக்கையாக உள்ளது. தன்னுடைய முகமூடியை கழட்டவில்லை என்று அனிதா கூறியதை நிஷாவிடம் கிண்டலடித்த அர்ச்சனா, அடிங்.. என்றும் எதையோ சொல்லவந்து கன்ட்ரோல் பண்ணினார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











