சூப்பர் சிங்கர் விவகாரம்.. விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்ட பிரபல நடிகை!

Recommended Video

Super singer Title Winner: மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்

சென்னை: சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தொடர்பாக தான் தெரிவித்த கருத்து குறித்த பிரபல நடிகை விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் கிரான்ட் பினாலே கடந்த வாரம் நடைபெற்றது. இதில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்ற 5 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.

கோயம்புத்தூரில் நடைபெற்ற பினாலே நிகழ்ச்சியில் இசையமைப்பாளர் அனிருத் விருந்தினராக கலந்துகொண்டார். இதில் மூக்குத்தி முருகன் முதல் பரிசை வென்றார். அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசளிக்கப்பட்டது.

மூன்றாம் பரிசு

மூன்றாம் பரிசு

இரண்டாவது பரிசை விக்ரம் தட்டிச்சென்றார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக வழங்கப்பட்டன. மூன்றாம் இடம் புன்யாவுக்கும் சாம் விஷாலுக்கும் வழங்கப்பட்டது.

நடிகை கருத்து

நடிகை கருத்து

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்த நடிகை ஸ்ரீபிரியா,
விஜய்டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன்.

நம்பிக்கை

புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன் என காட்டமாக பதிவிட்டார்.

திறமை மிக்கவர்கள்

திறமை மிக்கவர்கள்

ஸ்ரீபிரியாவின் இந்த பதிவுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். வாக்குகள் அடிப்படையிலேயே வின்னர் தேர்வு செய்யப்பட்டதாகவும், ஐந்து போட்டியாளர்களும் நன்றாக பாடும் திறமை மிக்கவர்கள் என்றும் தெரிவித்தனர்.

மன்னித்துவிடுங்கள்

இந்நிலையில் விஜய் டிவியிடம் மன்னிப்பு கேட்டு நடிகை ஸ்ரீபிரியா டிவிட்டியிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, விஜய் டிவி சூப்பர் சிங்கர் குறித்த எனது கருத்தில், என் நினைவு தப்பியதை நான் ஒப்புக் கொள்ள வேண்டும். நிச்சயமாக ஜூனியருக்கான கடந்த சீசனில் ஹிருத்திக்தான் சிறந்த வெற்றியாளர். மன்னித்து விடுங்கள் என தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X