கடந்த சீசன் போல இப்போதும் பிக்பாஸ் பற்றி கருத்து சொல்லட்டுமா? - கமல் கட்சி நடிகை!

By Vignesh Selvaraj

சென்னை : கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வருடம் செம வரவேற்பு பெற்றதையடுத்து இந்த ஆண்டும் அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது.

அதற்கான ப்ரொமோ டீசரை கமல் சமீபத்தில் வெளியிட்டிருந்தார். சர்ச்சைகளோடு கடந்த ஆண்டு தொடங்கிய பிக்பாஸ் சீசன் 1-ல் ஆரவ் வெற்றியாளர் ஆனார்.

பிக்பாஸ் முதல் சீசன் பற்றி தினசரி கருத்து தெரிவித்து வந்த ஸ்ரீபிரியா இந்த ஆண்டும் கருத்து சொல்லட்டுமா என ட்விட்டரில் கேட்டுள்ளார்.

தினசரி கருத்து

தினசரி கருத்து

கடந்த பிக்பாஸ் சீசன் ஒளிபரப்பானபோது தினசரி நிகழ்ச்சி குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து வந்தார் ஸ்ரீபிரியா. காயத்ரி, ஜூலி, ஆர்த்தி ஆகியோரை கடுமையாக விமர்சித்தும் வந்தார். இந்நிலையில் விரைவில் தொடங்கவிருக்கும் பிக்பாஸ் சீசன் 2 பற்றியும் தொடர்ந்து கருத்துகள் கூறட்டுமா எனக் கேட்டுள்ளார்.

ஸ்ரீபிரியா

"நண்பர்களே... BiggBoss2 துவங்க உள்ளது,சென்ற முறை என் கருத்துகளை பகிர்ந்து கொண்டேன். இம்முறையும் பகிர்ந்துகொள்ளவா? உங்கள் அபிப்பிராயத்தை சொல்லுங்கள்" எனக் கூறியுள்ளார். இவர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யத்தில் முக்கியப் பொறுப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

கருத்து

நிச்சயமாக பகிர்ந்து கொள்ளுங்கள்.. நம் கமல் சாரின் கருத்துக்கு இம்முறை எதிர்வினை முன்பை விட கூடுதலாக வரும்.. அதற்கான பதிலும் நம் விரலில் இருப்பது அவசியம். என ஒருவர் கூறியுள்ளார்.

நம்மவரும் அதைத்தான் விரும்புவார்

கருத்துக்கள் அவரவருடையது தாராளமாக சொல்லலாம் மேடம். நம்மவரே தவறு செய்தாலும் நம் கருத்தை தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவரும் விரும்புவார்.

வேண்டாம்

"வேண்டாம் மேம்!! அப்போ நீங்க ஒரு பார்வையாளரா விமர்சனம் வச்சீங்க!! இப்போ உங்க ஃபாலோவர்ஸ் அரசியலுக்காக வந்திருப்பாங்க!! அவ்வளவு சரியா இருக்காது.

அரசியல்

கருத்தை பகிர்வது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்த முறை கமல் சாரை பிஜேபியை எதிர்த்து பேச சொல்லுங்க என ஒருவர் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X