விஜய் டிவியில் அதிகரிக்கும் உருவ கேலி.. உரிமை கொடுத்தது யார்? கொந்தளிக்கும் நடிகை

Recommended Video

Losliya Double game:உணர்ச்சிகளோடு விளையாடும் லொஸ்லியா

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மற்றவர்களின் உருவத்தை கேலி செய்வதை நடிகை ஸ்ரீபிரியா கண்டித்துள்ளார்.

நடிகை ஸ்ரீபிரியா, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முக்கியப் பொருப்பில் இருந்து வருகிறார். இவர் அவ்வப்போது சமூகத்தின் முக்கியப் பிரச்சனைகள் குறித்தும், சின்னத்திரை நிகழ்ச்சிகள் குறித்தும் டிவிட்டி வருகிறார்.

குறிப்பாக விஜய் டிவி நிகழ்ச்சிகளை அவர் பார்த்து ரசிக்கிறார் என்பது அவரின் டிவிட்டுகளில் இருந்து தெரியும். பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து தொடர்ந்து கருத்து கூறி வரும் நடிகை ஸ்ரீபிரியா, யார் நேர்மையாக விளையாடுகிறார்கள்? யார் ஏமாற்றுகிறார்கள் என்பதை அக்யூரெட்டாக கூறுகிறார்.

ஸ்ரீபிரியா கண்டனம்

ஸ்ரீபிரியா கண்டனம்

இந்நிலையில் விஜய் டிவியின் தொகுப்பாளர்களான மாகாபாவும் பிரியங்காவும் மற்றவர்களை உருவ கேலி செய்து கிண்டலடித்துள்ளனர். இதற்கு நடிகை ஸ்ரீபிரியா கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

யார் உரிமை கொடுத்தது?

உருவகேலிக்கு எதிராக அவர் பல டிவிட்டுகளையும் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது, விஜய் டிவி சூப்பர் சிங்கரில் ஒருவரின் மூக்கை கேலிசெய்வதும்,எடையை கேலிசெய்வதும் சரியில்லை, மகாபா, பிரியங்கா உங்களின் தொகுத்து வழங்கும் திறமை எனக்கு வியப்பை அளிப்பது உண்மை, நீங்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து கொள்ளுங்கள் மற்றவரை கேலி செய்து அசிங்கப்படுத்தும் உரிமை யார் கொடுத்தது #உருவகேலியைஎதிர்போம். என்று கூறியிருக்கிறார்.

காமெடி செய்வது கேவலம்!

நேரம் கிடைக்கும் சமையங்களில் நான் அதிகம் பார்ப்பது விஜய்டிவி தான் அனைத்து நிகழ்ச்சிகளிலும் உருவ கேலி அதிகம் வருவது சோகம்.. மாற்றிக்கொள்வார்களா? ஒருவரை கேலி செய்து காமெடி செய்வது கேவலம்! என்று கடுமையாக சாடியிருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.

எதிர்ப்பை தெரிவியுங்கள்

என்னுடன் டிவிட்டரில் இணைந்து நிற்க்கும் 495.8 ஆயிரம் மக்களும் உருவகேலியை எதிர்போம் என்பதற்கு ஆதரவு கொடுக்கவேண்டும், நான் பல முறை உருவ கேலிக்கு ஆளாகி வருந்தியிருக்கிறேன், இதைப்போல கேவலமாக என்னை விமர்சித்தவரை நான் கடுமையாக கடிந்திருக்கிறேன்.உங்கள் எதிர்பை தெரிவியுங்கள்! என்று அழைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X