ஸ்ரீபிரியா மகள் சினேகா சேதுபதியின் பிரம்மாண்ட திருமணம்.. மணமக்களை வாழ்த்திய சினிமா பிரபலங்கள்!
சென்னை: நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதி மற்றும் அன்மோல் ஷர்மாவின் திருமணம் சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது.
இந்த ஆண்டு ஜனவரி மாதமே நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு விரைவில் திருமணம் நடைபெற போவதாக தகவல்கள் வெளியாகின.
மேலும், பிப்ரவரி 6ம் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளதாகவும், ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் வரவேற்பு நடைபெறும் என பேச்சுக்கள் அடிபட்டன.

ஸ்ரீபிரியா மகள் திருமணம்
இந்நிலையில், நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதியின் திருமணம் சென்னையில் இன்று பிரம்மாண்டமாக நடைபெற்றது. மாப்பிள்ளை அன்மோல் ஷர்மா இந்து முறைப்படி மணமகள் சினேகா சேதுபதிக்கு தாலி கட்டி மனைவியாக கரம் கோர்க்கும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

சினேகா சேதுபதி
நடிகை லதாவின் தம்பியான ராஜ்குமார் சேதுபதியை 1988ம் ஆண்டு நடிகை ஸ்ரீபிரியா திருமணம் செய்து கொண்டார். அவருக்கு நாகார்ஜுன் மற்றும் சினேகா என இரு குழந்தைகள் பிறந்தனர். இந்நிலையில், மகள் சினேகா சேதுபதிக்கு கோலாகலமாக திருமணம் செய்து வைத்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா.

லண்டனில் திருமணமா
கடந்த பிப்ரவரி 6ம் தேதியே லண்டனில் சினேகா சேதுபதி மற்றும் அன்மோல் ஷர்மாவுக்கு திருமணம் நடைபெற போவதாகவும், ஏப்ரல் 5 மற்றும் 6ம் தேதி சென்னையில் கோலாகலமாக வரவேற்பு நிகழ்வு நடைபெறும் என தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்நிலையில், இந்து முறைப்படி ஏப்ரல் 6ம் தேதி சென்னையில் சினேகா - அன்மோல் திருமணம் நடைபெற்றது.

டிரெண்டாகும் புகைப்படங்கள்
நடிகை ஸ்ரீபிரியாவின் மகள் சினேகா சேதுபதியின் திருமணம் சென்னையில் இன்று நடைபெற்ற நிலையில், அதன் பிரத்யேகமாக புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி டிரெண்டாகி வருகின்றன. காப்பு கட்டும் புகைப்படம், தாலி கட்டும் புகைப்படம் என திருமண வைபவ புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

சரத்குமார் ராதிகா
கோலிவுட் திரை பிரபலங்கள் பலர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்டனர். நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் மணமக்களை வாழ்த்தும் புகைப்படங்களும் வெளியாகி உள்ளன. ரசிகர்களும் சினிமா பிரபலங்களும் நடிகை ஸ்ரீபிரியாவின் மகளுக்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மனோபாலா வாழ்த்து
இயக்குநரும் நகைச்சுவை நடிகருமான மனோபாலா நடிகை ஸ்ரீபிரியா மகள் சினேகா சேதுபதி மற்றும் மாப்பிள்ளை அன்மோல் ஷர்மாவிற்கு பூங்கோத்து கொடுத்து திருமண வாழ்த்துக்களை தெரிவித்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். மேலும், பல சினிமா பிரபலங்களும் புகைப்படங்களை ஷேர் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











