குரல் கொடுக்காத இளையராஜா -ஏஆர் ரஹ்மான்.. காட்டம் காட்டிய ஸ்ரீபிரியா!
சென்னை : நடிகை ஸ்ரீபிரியா ஏராளமான தென்னிந்திய மொழிப் படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர்.
கமல், ரஜினி என முன்னணி நடிகர்களுடன் தமிழில் ஜோடி சேர்ந்து நடித்தவர் ஸ்ரீபிரியா. ஸ்ரீதேவி காலகட்டத்தில் அவருக்கு சிறப்பான போட்டியாக திகழ்ந்தவர்.
தற்போது சினிமாவில் நடிப்பதை கைவிட்டு அரசியலில் கவனம் செலுத்தி வருகிறார் ஸ்ரீபிரியா. அவ்வப்போது சமூக விஷயங்களுக்காகவும் குரல் கொடுத்து வருகிறார்.

நடிகை ஸ்ரீபிரியா
நடிகை ஸ்ரீபிரியா 80களின் காலகட்டத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். தொடர்ந்து கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் அதிகமான படங்களில் நடித்தவர். ஸ்ரீதேவி -ஸ்ரீபிரியா போட்டிப் போட்ட படங்கள் தமிழில் அதிகமாக காணப்படுகிறது. ஸ்ரீதேவிக்கு சிறப்பான போட்டியாக காணப்பட்டவர் ஸ்ரீபிரியா.

ரஜினி -கமலுடன் ஜோடி
முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து ஸ்ரீபிரியா நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர் டூப்பர் வெற்றியை பெற்றுத் தந்தன. சினிமாவில் மட்டுமில்லாமல் சின்னத்திரையிலும் இவரது போல்டான நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சீரியல்களில் மிகச்சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார் ஸ்ரீபிரியா.

அரசியலில் ஈடுபாடு
தைரியமாக தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தக்கூடிய ஸ்ரீபிரியா தற்போது கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்து செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது பிரபல இசையமைப்பாளர்கள் இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் குறித்த தன்னுடைய கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

எம்எஸ்வியின் தாக்கம்
இந்திய விருதுகளில் மிகவும் முக்கியமான விருதுகளான பத்ம விருதுகளை இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் தமிழின் இசைமேதையான எம்எஸ்வியின் தாக்கம் இல்லாமல் இசையுலகிற்கு வந்திருக்க முடியாது என்று கூறியுள்ள ஸ்ரீபிரியா, அத்தகைய இசையுலக மாமேதைக்கு இதுவரை மத்திய அரசு பத்ம விருதுகளை அறிவிக்காததையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

எதிர்ப்பை காட்டாத இளையராஜா -ஏஆர் ரஹ்மான்
எம்எஸ்விக்கு பத்ம விருதை அறிவிக்காததால், பிரபல பின்னணி பாடகி ஜானகி, தனக்கு கிடைத்த பத்ம விருதை வேண்டாம் என்று தூக்கி எறிந்தார். ஆனால் இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான், இதுகுறித்த எந்தவிதமான எதிர்ப்பையும் இதுவரை வெளிக்காட்டவில்லை என்றும் தனக்கு மட்டும் இந்த விருதுகள் கிடைத்தால் போதும் என்று அவர்கள் கருதுகிறார்களா என்றும் ஸ்ரீபிரியா கேள்வி எழுப்பியுள்ளார்.

இளையராஜா -ஏஆர் ரஹ்மான் மீது வருத்தம்
தன்னுடைய சிறப்பான இசையால் சிவாஜி, எம்ஜிஆர் படங்களில் அதிகப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள எம்எஸ்விக்கு பத்ம விருது அறிவிக்காதது குறித்து குரல் எழுப்பாத இளையராஜா மற்றும் ஏஆர் ரஹ்மான் மீது தனக்கு வருத்தம் இருப்பதாகவும் ஸ்ரீபிரியா தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











