அய்யோ.. தயவு செஞ்சு அழுவாதீங்க.. அருவருப்பா இருக்கு.. அனிதா கதறலை பார்த்து காண்டான பிரபல நடிகை!

சென்னை: சனம் ஷெட்டி வெளியேறியதும் அனிதா அவரை கட்டியணைத்து ஒப்பாரி வைத்ததை பார்த்த பிரபல நடிகை காட்டமாக டிவிட்டியுள்ளார்.

நடிகையும் மாடலுமான சனம் ஷெட்டி தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

எந்த குரூப்பிலும் சேராமல் தனியாளாக விளையாடி வந்தார் சனம் ஷெட்டி. தினமும் ஏதாவது ஒரு பிரச்சனையில் சிக்கி வந்தார்.

சுரேஷுடன் சண்டை

சுரேஷுடன் சண்டை

குறிப்பாக பாலாஜிக்கும் அவருக்கும் தினமும் போர்தான். பாலாஜியும் பல இடங்களில் சனம் ஷெட்டியை அவமானப்படுத்தியுள்ளார். சனம் ஷெட்டி, சுரேஷ் சக்கரவர்த்தியை காடா நாடா டாஸ்க்கின் போது கடுமையாக பேசினார். இதனால் கடும் விமர்சனத்துக்கு ஆளானார் சனம்.

எவிக்ட்டான சனம்

எவிக்ட்டான சனம்

இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இருந்து நேற்று வெளியேற்றப்பட்டார் சனம் ஷெட்டி. சனம் ஷெட்டிதான் வெளியேறப் போகிறார் என்ற தகவல் நிகழ்ச்சி ஒளிபரப்பாவதற்கு முன்பு வெளியாகிவிட்டது.

ஒப்பாரி வைத்த அனிதா

ஒப்பாரி வைத்த அனிதா

சனம் ஷெட்டியின் எவிக்ஷன் ரசிகர்களையும் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் நேற்று பிக்பாஸ் வீட்டிலிருந்து சனம் ஷெட்டி எவிக்ட்டானதை அறிவித்தார் கமல். அதனைக் கேட்ட அனிதா ஒப்பாரி வைத்து அழுதார்.

அடுத்த வாரம் வந்துடுவேன்

அடுத்த வாரம் வந்துடுவேன்

ஏற்கனவே சனம் ஷெட்டியை அனிதா நாமினேட் செய்துள்ளார். இந்நிலையில் நேற்று சனம் வெளியேறுகிறார் என்பதை அறிந்ததும் கட்டியணைத்து கதறினார். அடுத்த வாரம் நானும் வெளியே வந்துடுவேன் என்றும் கூறினார் அனிதா.

அனிதாவுக்கு பயம்

அனிதாவுக்கு பயம்

அனிதா அழுததை பார்த்த நெட்டிசன்கள், எரிச்சலடைந்தனர். பலரும் அனிதா நடிக்கிறார் என்றும் அவருக்கு அடுத்த வாரம் தான் வெளியே சென்றுவிடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வந்தனர்.

நடிகை ஸ்ரீபிரியா

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் நடிகை ஸ்ரீபிரியா, நிகழ்ச்சி குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் நேற்றைய எபிசோடில் அனிதா அழுதது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அருவருப்பா இருக்கு

அதாவது, அய்யோ அய்யோ.. தயவு செஞ்சு அழாதீங்க.. அருவருப்பா இருக்கு என பதிவிட்டுள்ளார். அவரது பதிவை பார்த்த நெட்டிசன்கள், ஆமாம் மேடம் அனிதா அழுவது இரிட்டேட்டிங்காய் உள்ளது, நல்லா நடிக்கிறார் என்றும் கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X