அரசு அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்.. பிக்பாஸ் ஹவுஸ் மறுநாள் கொல்லும்.. பங்கம் செய்த நடிகை!

சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடை பார்த்த பிரபல நடிகை மொத்த நிகழ்ச்சியையும் மரண பங்கம்
செய்துள்ளார்.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி கடந்த எபிசோடுகளை காட்டிலும் சூடாகவும் சுவாரசியமாகவும் சென்று கொண்டிருக்கிறது.

மேலும் சர்ச்சைகளுக்கும் சண்டைகளுக்கும் பஞ்சமில்லாமலும் உள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சி.

விஜய் டிவி புராடெக்ட்ஸ்

விஜய் டிவி புராடெக்ட்ஸ்

குறிப்பாக பிக்பாஸ் வீட்டில் அதற்குள்ளேயே குரூப்பிஸம் ஆரம்பமாகிவிட்டது. விஜய் டிவி புராடெக்ட்டுகளெல்லாம் ஒரு டீமாகவும் வெளியில் இருந்து வந்த போட்டியாளர்கள் எல்லாம் ஒரு டீமாகவும் உள்ளனர்.

அசிங்கப்படுத்தும் ரியோ

அசிங்கப்படுத்தும் ரியோ

இந்த சீசனில் பிக்பாஸ் ஹவுஸ்மேட்ஸ் மொத்த பேராலும் கார்னர் செய்யப்படும் ஒரே நபர் சுரேஷ் சக்ரவர்த்திதான். அவர் என்ன பேசினாலும், அதற்கு ஏதாவது ஒரு கவுண்டர் கொடுத்து அசிங்கப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளார் ரியோ.

பெரும் பிரச்சனையாக்கி

பெரும் பிரச்சனையாக்கி

அனிதாவும் சனமும் ஏதாவது ஒரு பிரச்சனை செய்தால் பிக்பாஸ் வீட்டில் நீடிக்கலாம் கன்டென்ட்டுக்காக நம்மை வைத்துக்கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் சிறு சிறு விஷயங்களை எல்லாம் பெரும் பிரச்சனையாக்கி வருகிறார்.

நேற்று பெரிதாக இல்லை

நேற்று பெரிதாக இல்லை

இதனாலேயே பிக்பாஸ் வீட்டில் நாள்தோறும் ஒரு சண்டை சச்சரவு என இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய எபிசோடில், பட்டிமன்றம், மாத்து கை மாத்து என்ற விளையாட்டுகளுடன் பெரிதாக சொல்லும்படி சண்டை ஏதும் இல்லாமல் சென்றது.

பிக்பாஸ் மறுநாள் கொல்லும்

பிக்பாஸ் மறுநாள் கொல்லும்

இதனை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா தனது டிவிட்டர் பக்கத்தில் இதுகுறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அதன்படி பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று எந்த விறுவிறுப்பும் இல்லாமல் இருந்ததை கூறும் வகையில் அரசு அன்று கொல்லும்,தெய்வம் நின்று கொல்லும்... பிக்பாஸ் ஹவுஸ் மறு நாள் கொல்லும் என கேலி செய்து பதிவிட்டுள்ளார்.

சண்டை சச்சரவு இல்லாமல்

சண்டை சச்சரவு இல்லாமல்

மற்றொரு டிவிட்டில் பிக்பாஸ் வீட்டில் நேற்று பெரிதாக எந்த சண்டையும் இல்லாமல் நிகழ்ச்சி முடிந்ததை தொடர்ந்து, அப்படியா? நிஜமாகவா? இன்றைக்கு சண்டை சச்சரவு இல்லாமல் நிகழ்ச்சி முடிந்து விட்டது?சபாஷ் என பாராட்டியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X