சூப்பர் சிங்கர்.. மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்.. வரிந்துக்கட்டிய பிரபல நடிகை!

Recommended Video

Super singer Title Winner: மூக்குத்தி முருகனுக்கு எப்படி டைட்டில் கொடுக்கலாம்

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் பினாலேவில் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டதற்கு பிரபல நடிகை எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் சீசன் 7 நிகழ்ச்சி கடந்த சில மாதங்களாக ஒளிப்பாகி வந்தது. இதன் இறுதிச்சுற்றுக்கு மூக்குத்தி முருகன், விக்ரம், சாம் விஷால், புன்யா, கவுதம் ஆகியோர் ஃபைனல்ஸ்க்கு தகுதி பெற்றனர்.

இதன் இறுதிச்சுற்று கிராண்ட் ஃபினாலேவாக நேற்று கோவையில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் அனிருத், பிக்பாஸ் டைட்டில் வின்னர் முகென் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மூக்குத்தி முருகன்

மூக்குத்தி முருகன்

இதில் ஏராளமான பொதுமக்களும் கலந்து கொண்டனர். ஃபைனலில் ஒவ்வொரு போட்டியாளரும் தலா இரண்டு பாடல்களை பாட வேண்டும். அதன்படி ஆரம்பம் முதலே மக்களின் வரவேற்பை பெற்ற மூக்குத்தி முருகன், முதலில் எங்கே நிம்மதி பாடலையும் இரண்டாவதாக பில்லா படத்தில் இருந்து வெத்தலையே போட்டேன்டி.. என்ற பாடலை பாடி அரங்கத்தை அதிர வைத்தார்.

சிறப்பான பாடல்கள்

சிறப்பான பாடல்கள்

தொடர்ந்து புன்யா, முதல்வன் படத்திலிருந்து முதல்வனே பாடலை பாடி அரங்கத்தை ஆட்டம் போட வைத்தார். இதேபோல் ஒவ்வொரு போட்டியாளரும் பினாலே மேடை எவ்வளவு முக்கியம் என்பதை உணர்ந்து சிறப்பான பாடல்களை தேர்வு செய்து பாடினர்.

டைட்டில் வின்னர்

டைட்டில் வின்னர்

இந்நிகழ்ச்சியில் சூப்பர் சிங்கரின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு அனிருத் இசையில் பாட வாய்ப்பும் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீடும் பரிசாக அறிக்கப்பட்டது.

இரண்டாவது பரிசு

இரண்டாவது பரிசு

அவரை தொடர்ந்து விக்ரம் முதல் ரன்னர் அப் அதாவது இரண்டாவது இடத்தை பிடித்தார். அவருக்கு 25 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைர நகைகள் பரிசாக அறிவிக்கப்பட்டது.

பாட வாய்ப்பு

பாட வாய்ப்பு

மூன்றாவது இடத்தை புன்யாவும், சாம் விஷாலும் பகிர்ந்து கொண்டனர். அவர்களுக்கு தன்னுடைய இசையில் பாட வாய்ப்பு தருவதாக இசையமைப்பாளர் அனிருத் மேடையிலேயே அறிவித்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மூக்குத்தி முருகனுக்கு டைட்டில் வின்னர் பட்டம் கொடுத்ததற்கு பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த எளிய மனிதரான மூக்குத்தி முருகனின் திறமைக்கு சூப்பர் சிங்கர் மேடை அங்கீகாரம் அளித்தது பலருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியாயமில்லை

நியாயமில்லை

ஆனால் நடிகை ஸ்ரீபிரியா மூக்குத்தி முருகனுக்கு முதல் பரிசு வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், #விஜய்டிவி தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்த ஒரு போட்டியாளருக்கு சூப்பர் சிங்கர் டைட்டில் ஒருபோதும் வழங்கப்படுவதில்லை என்று நான் நம்புகிறேன்.

நம்பிக்கையுடன் இருக்கிறேன்

புன்யாவும் விக்ரமும் சங்கீத ரீதியாக புத்திசாலிகள். சத்யபிரகாஷ்க்கு டைட்டில் கொடுக்காத போதே இந்த போங்கு ஆரம்பித்து விட்டது. எப்போதாவது நியாயமாக சங்கீதத்தை மட்டும் கௌரவிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் பார்கிறேன் என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

அழுக்க கழுவுங்க

ஸ்ரீபிரியாவின் இந்த டிவிட்டை பார்த்த நெட்டிசன்கள், உங்கள் கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நியாயமான வெற்றியாளரை தான் தேர்ந்தெடுக்கிறதா...? நியாயம் இல்லாத விஜய் டிவிக்கு உங்க கமல் எதுக்கு முட்டு கொடுக்குறார்...? அடுத்தவனுக்கு உபதேசம் செய்யும் முன் உங்க முதுகு அழுக்க கழுவுங்க என தெரிவித்துள்ளனர்.

சென்டிமென்ட் வாக்கு இல்லை

மேலும் சிலர் மூக்குத்தி முருகன் டைட்டில் வின்னராக தகுதியானவர்தான் என்றும் கூறியுள்ளனர். இதுதொடர்பாக ஒரு நெட்டிசன் பதிவிட்டிருப்பதாவது, இல்லை மேடம். இந்த சீசனில் அனைவரும் நன்றாக பாடினர். யாரையும் குறைவாக மதிப்பிட முடியாது. முருகனின் பாடல் செலக்ஷன் நன்றாக இருந்தது. முந்தைய சீசன்களில் இருந்து பாடல்கள் ரீப்பிட் ஆகவில்லை. ஆரம்பத்தில் இருந்தே அவர் நன்றாகப் பாடினார். சென்டிமென்ட் வாக்கு இல்லை. அவர் டைட்டில் வின்னராக தகுதியானவர். என தெரிவித்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X