அடடா.. பின்றீங்க.. நல்ல வேலை பண்ணியிருக்கீங்க.. பற்ற வைத்த சுச்சியை பாராட்டி தள்ளிய பிரபல நடிகை!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் வேலையை ஆரம்பித்துள்ள சுச்சியை பிரபல நடிகை பாராட்டி தள்ளியுள்ளார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் முதல் வைல்ட் கார்டு என்ட்ரியாக விஜே அர்ச்சனா கடந்த 2 வாரங்களுக்கு முன்பு உள்ளே நுழைந்தார்.
பிக்பாஸ் வீட்டுக்குள் வந்ததில் இருந்தே அவருடைய ஆதிக்கம்தான் பிக்பாஸ் வீட்டில் அதிகமாக இருந்து வருகிறது.

சூடு போட்ட கமல்
இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா போட்டியாளரா அல்லது பிக்பாஸ் ஆங்கரா என்று கேட்கும் அளவுக்கு ஆனது. அர்ச்சனாவை கவனித்த கமல், நீங்கள் போட்டியாளராகவே இருங்கள், ஆங்கரிங் பண்ண வேண்டாம் என சூடு போட்டார்.

சுச்சி என்ட்ரி
அதன் பிறகு ஓரளவுக்கு அர்ச்சனாவின் ஆதிக்கம் குறைந்துள்ளது. இருந்த போதும் குரூப்பிஸம் தொடருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் வீட்டில் வைல்டு கார்டு என்ட்ரியாக சுச்சி லீக்ஸ் புகழ், பாடகி சுசித்ரா பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றார்.

பெட்டர் அனாலிஸிஸ்
போனதுமே யார் யார் எப்படி என்று ஈமோஜிகளை கொடுத்து விளக்கினார் சுச்சி. அர்ச்சனாவை விடவும் சுச்சியின் அனாலிஸிஸ் பெட்டராக இருந்தது. சுரேஷ் சக்ரவர்த்தி, ரியோ, பாலாஜி, அனிதா, அர்ச்சனா என ஒவ்வொருவரிடமும் அவர்களின் நிலைப்பாடு குறித்து விளக்கினார்.

கொம்பு சீவி விட்ட சுச்சி
சிலரை கொம்பு சீவியும் விட்டார் சுச்சி. சுச்சி கொம்பு சீவி விட்டதால் கடந்த சில நாட்களாக இருக்கும் இடம் தெரியாமல் இருந்த சிலர் தற்போது மீண்டும் ஃபார்முக்கு வந்துள்ளனர். பிக்பாஸ் வீடு நேற்று முதல் பற்றி எரிய தொடங்கியுள்ளது.

நடிகை டிவிட்
இதனால் பிக்பாஸ் வீட்டில் சுவாரசியம் கூடியுள்ளது. சமூக வலைதளங்களிலும் சுச்சி எரிந்து கொண்டிருக்கும் வீட்டில் பெட்ரோல் உற்றி பற்ற வைத்துள்ளதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை ஸ்ரீபிரியா சுச்சியின் பிக்பாஸ் பர்ஃபாமன்ஸ் குறித்து டிவிட்டியுள்ளார்.

சுச்சி பின்றீங்க..
அதாவது, இப்போ வரைக்கும் சுச்சித்ராவின் வேலை சிறப்பு என பதிவிட்டுள்ளார். மற்றொரு டிவிட்டில், அடடா சுச்சி பின்றீங்க என பாராட்டியுள்ளார். மேலும் டிவிட்டில், இது ஒரு வகையான கேம் மாற்றமா? என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா.


Click it and Unblock the Notifications











