நடிகை ஸ்ரீபிரியா மகளுக்கு திருமணம்… மாப்பிள்ளை யார் தெரியுமா ?
சென்னை : பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கும் அன்மோல் சர்மாவுக்கும் பிப்ரவரி 6ந் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது.
தமிழ் சினிமாவின் 80-களில் முன்னணி நடிகையாக இருந்து வந்தவர் நடிகை ஸ்ரீப்ரியா. இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்களில் நடித்து, பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார்.

நடிகை ஸ்ரீபிரியா
முன்னணி கதாநாயகிகளான ஸ்ரீதேவி, ராதிகா, ராதா போன்ற பல முன்னணி நடிகைகளுக்கு செம டஃப் கொடுத்தவர். முன்னணி நடிகையாக இருக்கும் போதே, பிரபல நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை கடந்த 1988ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

திரைக்கு வரவில்லை
இவர்களுக்கு தற்போது நாகார்ஜுன் என்கிற மகனும், சினேகா என்கிற மகளும் உள்ளனர். அம்மா அப்பா இருவருமே நடிகராக இருந்த போதிலும், நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் மற்றும் மகன் என இருவருமே திரையுலகில் பெரிதாக கவனம் செலுத்தாமல், அவர்களுக்கு பிடித்த துறையை தேர்வு செய்து படித்தனர்.

லண்டனில் திருமணம்
இந்நிலையில், திரைப்பட தயாரிப்பாளர் ராஜ்குமார் சேதுபதி மற்றும் பிரபல நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் சினேகாவுக்கும், ராஜேஷ் சர்மா மற்றும் சாதனாவின் மகன் அன்மோல் சர்மாவுக்கும பிப்ரவரி 6ம் தேதி லண்டனில் திருமணம் நடைபெற உள்ளது.

சட்டம் படித்துள்ளார்
லண்டனில் உள்ள வாரிக் கல்லூரியில் சினேகா சட்டம் பயின்றுள்ளார், மேலும், லண்டனிலேயே தனது முதுகலை மற்றும் சட்டப் பயிற்சி படிப்பையும் முடித்துள்ளார். அதேபோல, அன்மோல் சர்மாவும், எம்பிஏ படித்துவிட்டு லண்டனில் உள்ள பாங்க் ஆஃப் இங்கிலாந்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது குடும்பம் கடந்த 25 ஆண்டுகளாக இங்கிலாந்தில் பணியாற்றி வருகின்றனர்.

தென்னிந்திய முறைப்படி
தற்போதைய கொரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டும் விசா நடைமுறைக்கு உதவும் வகையிலும், திருமணம் லண்டனில் பதிவு செய்யப்பட உள்ளது. இருப்பினும், ஏப்ரல் 4, 5, 6 ஆகிய தேதிகளில் தென்னிந்திய முறைப்படி சென்னையில் கோலாகலமாக பிரமாண்டமான முறையில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் முறையான அழைப்பிதழ் அனுப்பட்டு வருகிறது. சினேகாவும் அன்மோல் ஷர்மாவும் அனைவரும் தங்கள் வாழ்த்துக்களை இணையத்தின் வாயிலாக தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











