நடிகை ஸ்ரீ பிரியா வீட்டில் நடந்த சோகம்.. திரையுலகினர் இரங்கல்!

சென்னை : நடிகை ஸ்ரீ பிரியாவின் தாயார் வயது மூப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 81.

70 மற்றும் 80 கால கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீ பிரியா. இவர் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினி, கமல், சிவக்குமார், சத்யராஜ் போன்ற முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து நட்சத்திர நடிகை என பெயர் எடுத்தார்.

இவர், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிகளில் 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இதில் இவருடைய சிறந்த நடிப்புக்காக பல விருதுகளை வாங்கியுள்ளார்.

நடிகை ஸ்ரீ பிரியா

நடிகை ஸ்ரீ பிரியா

அந்த காலத்தில் மிகவும் துணிச்சலாகவும், தைரியமாகவும் இருந்த ஒரே நடிகை ஸ்ரீபிரியா தான். இவர் ரஜினியுடன் 30 படங்கள் மற்றும் கமலுடன் 28 படங்கள் என பிரம்மாண்டமாக நடித்து அசத்தியவர். இவர் நடிப்பில் வெளிவந்த அனைத்துப் படங்களும் மக்கள் மனதில் இடம் பிடித்தன.

1988ம் ஆண்டு திருமணம்

1988ம் ஆண்டு திருமணம்

நடிகை ஸ்ரீபிரியா மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை 1988ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நாகார்ஜுன் என்ற மகனும் ஸ்நேகா என்ற மகளும் இருக்கிறார்கள். இவரது மகள் ஸ்நேகாவுக்கு அண்மையில் லண்டனில் தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகு சினிமாவிலிருந்து விலகியே இருந்த ஸ்ரீபிரியா, இரு திரைப்படங்களையும், இரு தொலைக்காட்சி தொடர்களையும் இயக்கி இருக்கிறார்.

ஸ்ரீ பிரியாவின் தாயார் காலமானார்

ஸ்ரீ பிரியாவின் தாயார் காலமானார்

இந்நிலையில் ஸ்ரீ பிரியாவின் தாயார் கிரிஜா பக்கிரி சாமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 81. புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞரான குரு காரைக்கால் நடேசன் பக்கிரிசாமி பிள்ளையின் மனைவி தான் கிரிஜா பக்கிரிசாமி . இவர், காதோடு தான் நான் பேசுவேன் என்ற படத்தையும் இயக்கியுள்ளார். அதே போல் நீயா, நட்சத்திரம், போன்ற படங்களை மகளுடன் சேர்ந்து தயாரித்துள்ளார்.

இன்று இறுதிச்சடங்கு

இன்று இறுதிச்சடங்கு

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக வரும் உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த கிரிஜா பக்கிரிசாமி மயிலாப்பூரில் உள்ள தன்னுடைய வீட்டில் உயிரிழந்தார். இவருக்கு நடிகை ஸ்ரீபிரியாவை தவிர ஸ்ரீகாந்த் என்கிற மகன் ஒருவரும் உள்ளார். இவருடைய இறுதிச் சடங்குகள் இன்று மாலை மயிலாப்பூரில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருடைய மறைவுக்கு பலர் தங்களுடைய இரங்கல்களை தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X