அய்யோ.. என்னா நடிப்பு.. அர்ச்சனாவை மீண்டும் கிழித்துவிட்ட பிரபல நடிகை.. வேற லெவல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் செவ்தையெல்லாம் செய்து விட்டு அம்மா டயலாக் பேசிய அர்ச்சனாவை பிரபல நடிகை விளாசி விட்டுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஒவ்வொருவரின் உண்மை முகத்தையும் ஏதாவது ஒரு தருணத்தில் தோலுரித்துக் காட்டிவிடும்.
அந்த வகையில் கடந்த சீசன்களில் ஜூலி, காயத்ரி ரகுராம், சக்தி, வனிதா என பலரின் ஒரிஜினாலிட்டியும் வெளியே வந்தது. அவர்களை கழுவி ஊற்றினர் நெட்டிசன்கள்.

உண்மை முகம்
இந்நிலையில் இந்த பிக்பாஸ் சீசனிலும் பலரின் உண்மை முகம் தெரிந்து வருகிறது. எப்போதும் சிரித்தப்படியே தொலைக்காட்சிகளில் தோன்றும் ரியோ, அர்ச்சனா, அனிதா சம்பத், சனம் ஷெட்டி போன்றோரின் உண்மை முகம் அப்பட்டமாய் வெளிப்பட்டுள்ளது.

பிரபலங்களும் பார்க்கிறார்கள்
அவர்களை சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கழுவி ஊற்றி வருகின்றனர். பிரபலங்கள் பலரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை ஃபாலோ செய்து வருகின்றனர். யார் யார் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பது குறித்தும் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்தும் ரசிகர்கள் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அர்ச்சனாவுக்கு ஆப்பு
அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியாவும் தனது கருத்தை டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்றைய எபிசோட்டில் அர்ச்சனா நடந்து கொண்ட விதம் குறித்து கிழித்து தொங்கவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா.

உசுப்பிய அர்ச்சனா
நேற்றைய எபிசோட் நேற்று முன்தினம் நடந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக அமைந்தது. அதில் வீட்டின் கேப்டனான அர்ச்சனா, தூங்கி கொண்டிருந்த பாலாஜியை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொல்லுமாறு வேல் முருகனை உசுப்பி விட்டார்.

புலம்பிய பாலாஜி
அவரும் அர்ச்சனாவின் மகுடிக்கு மயங்கிய பாம்பாக ஆடி தூங்கிக் கொண்டிருந்த பாலாஜியை எழுப்பி ஹவுஸ் கீப்பிங் செய்ய சொன்னார். தூங்குறவனை எழுப்பி வேலை செய்ய சொல்வதெல்லாம் சரியல்ல என்று புலம்பியப்படியே வீட்டை பெருக்கினார் பாலாஜி.

எப்படி வம்பிழுக்கலாம்
அப்போது அவரை எப்படி வம்பிழுக்கலாம் என்று யோசித்த அர்ச்சனா அவர் சொன்ன வார்த்தைகளை எல்லாம் வைத்து விளாசினார். அவருக்கு ஜால்ராவாக ரியோ வேல் முருகன், நிஷா ஆகியோரும் சேர்ந்து கொண்டு பாலாஜியை கேள்விகளால் துளைத்தெடுத்தனர்.

பாலவை கவிழ்த்த அர்ச்சனா
இதனால் கார்டன் ஏரியாவில் தனியாக அமர்ந்து கண்ணீர்விட்டு அழுதார் பாலாஜி. அப்போது அவரை ரியோ, சோம் ஆகியோருடன் சேர்ந்து கிண்டலடித்தார் அர்ச்சனா. ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே என்ன ஆனதோ தெரியவில்லை சென்டிமெண்டாக அம்மா டயலாக்கை பேசி அவரை கவிழ்த்துவிட்டார்.

நம்பாதே பாலாஜி
என் குழந்தையா நீ எனக்கு வேணும்டா என்று கதறினார் அர்ச்சனா. அர்ச்சனாவின் அந்த திடீர் மாற்றத்தை பார்த்த ரசிகர்கள், சூதானமா இருந்துக்க பாலாஜி, கண்ணீரையெல்லாம் நம்பாதே என அட்வைஸ் செய்தனர். பலரும் அர்ச்சனா பண்ணுவது டிராமா என்று கூறினர்.
என்னா டிராமா..
அதையேத்தான் நடிகை ஸ்ரீபிரியாவும் கூறியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில், அய்யோ என்னா டிராமா என பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவை பார்த்த நெட்டிசன்கள், சரியா சொன்னீங்க மேடம் டிராமாதான். அடுத்த வாரத்தில் உண்மை தெரிந்து விடும் என தெரிவித்துள்ளனர்.
அவரை பிடித்துவிட்டது
மேலும் சம்யுக்தாவை எனக்கு ரொம்பவே பிடித்து விட்டது என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா. மேலும் நேற்றைய எபிசோடின் இறுதியில் ஹவுஸ்மேட்ஸ் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த ஸ்ரீபிரியா, எல்லோரும் மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்த மகிழ்ச்சி.. அப்பா.. என்றும் பதிவிட்டுள்ளார் ஸ்ரீபிரியா.


Click it and Unblock the Notifications











