ப்ளீஸ்.. நாம் சிறப்பாக செய்தோம் என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும்.. வனிதாவை வாரிய சீனியர் நடிகை!

Recommended Video

Bigg Boss 3 Tamil : கஸ்தூரியிடம் மல்லுக்கட்டும் வனிதா- வீடியோ

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் நுழைந்து அட்டகாசம் செய்து வரும் வனிதாவை நடிகை ஸ்ரீபிரியா வாரியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா இரண்டாவது வாரத்திலேயே பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் வீட்டில் நடக்கும் சின்ன சின்ன பிரச்சனைகளையும் ஊதி பெரிதாக்கி பிக்பாஸ் வீட்டையே போர்க்களமாக்கினார்.

சகஹவுஸ்மேட்ஸ்கள் யாரையும் மதிக்காமல் தான் வைத்ததுதான் பிக்பாஸ் வீட்டில் சட்டம் என்று இருந்து வந்தார். இதனால் பார்வையாளர்கள் அவர் மீது செம கடுப்பில் இருந்தனர்.

விருந்தாளியாக வந்த வனிதா

விருந்தாளியாக வந்த வனிதா

எப்போது வனிதா நாமினேஷனுக்கு வருவார் என காத்திருந்த பார்வையாளர்கள் அவருக்கு ஆப்பு வைத்த வெளியேற்றினர். ஆனால் டிஆர்பி குறைந்ததால், பிக்பாஸ் வனிதவை விருந்தாளியாக பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வந்தார்.

வெளியேறிய மதுமிதா

வெளியேறிய மதுமிதா

விருந்தாளியாக வந்த வனிதா, மீண்டும் ஆட்டத்தை ஆரம்பித்தார். பழையபடி சண்டை மூட்டி விட்டு குளிர் காய்ந்தார். அவர் கொளுத்தி போட்டதால் பிக்பாஸ் வீடே பற்றி எரிந்தது. வனிதாவால் ஏற்பட்ட சண்டையால் மதுமிதா தற்கொலைக்கு முயன்று வீட்டை விட்டே வெளியேறினார்.

ஓட்டுக்கு மதிப்பில்லையா?

ஓட்டுக்கு மதிப்பில்லையா?

இதனால் வனிதா எப்போது வெளியேறுவார் என மக்கள் கேள்வி கேட்க தொடங்கினர். விவகாரத்தை சுதாரித்த பிக்பாஸ் ஒரு வாரம் ஆறப்போட்டு வனிதாவை வைல்டு கார்டு என்ட்ரியாக அறிவித்தார் பிக்பாஸ். இதனால் மக்கள் காண்டாகினர். அப்போது நாங்கள் வாக்களித்ததற்கு மதிப்பே இல்லையா என்றும் கேள்வி எழுப்பினர்.

திருந்தாத வனிதா

திருந்தாத வனிதா

ஆனால் பிக்பாஸ் எதிர்பார்த்தப்படி வனிதா எல்லோரையும் வச்சு செய்து வருகிறார். கொஞ்சமும் அவர் திருந்தவே இல்லை. கடந்த முறை அவரை சமூக வலைதளங்களில் கழுவி ஊற்றியும் கூட அவர் தன்னை மாற்றிக்கொள்ளவில்லை. தான் எப்போதுமே சரி மற்றவர்கள்தான் தவறு என்ற மனநிலையில்தான் உள்ளார்.

`சேரன் பெயர்

`சேரன் பெயர்

இந்நிலையில் நேற்றைய எபிசோடில் இந்த வார லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் மற்றும் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர்கள் யார் என்று கேட்டார் பிக்பாஸ். அப்போது டாஸ்க்கில் சாண்டி, மற்றும் லாஸ்லியா பெயர்களையும் வாரம் முழுவதும் சிறப்பாக செயல்பட்டவர் என சேரன் பெயரையும் குறிப்பிட்டனர்.

வனிதா வாக்குவாதம்

வனிதா வாக்குவாதம்

உடனே வனிதாவுக்கு மூக்கு மேல் வேர்த்துவிட்டது. ஏன் நான் சரியாக செய்யவில்லையா என வரிந்து கட்டிக்கொண்டு வந்த அவர், சேரன் தலைமையாசிரியராக தனது பிரச்சனையை உடனடியாக தீர்த்து வைக்கவில்லை என்று வாக்குவாதம் செய்தார். மேலும் கிண்டர் கார்டன் மாணவர்கள் போராட்டம் செய்வார்கள், அவர்களின் மெட்சூரிட்டியை நீங்கள் அளவிட முடியாது என்று மல்லுக்கட்டினார்.

மற்றவர் சொல்ல வேண்டும்

இதனால் பார்வையாளர்கள் கடுப்பாகினர். இந்நிலையில் வனிதாவின் இந்த நடவடிக்கை குறித்து, நடிகை ஸ்ரீபிரியா டிவிட்டியுள்ளார். அதாவது, ப்ளீஸ், நாம் சிறப்பாக செய்தோம் என்று மற்றவர் சொல்லவேண்டும் என்று பதிவிட்டுள்ளார். வனிதா, தான் சிறப்பாக செய்ததாக தன்னை பாராட்டிக் கொண்டதை ஸ்ரீபிரியா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X