ஹய்யோ ஹய்யோ.. ராமாயணம் எழுதியது யார் சொல்லுங்க பாப்போம்..முதல்வரை கலாய்த்து வாங்கி கட்டிய நடிகை!

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்து சீனியர் நடிகை ஒருவர் டிவிட்டியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நிதி மய்யம் கட்சியின் முக்கிய பொறுப்பில் இருப்பவர் நடிகை ஸ்ரீபிரியா. இவர் நடிகர் கமல்ஹாசனுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

வாழ்வே மாயம், அலாவுதினும் அற்புத விளக்கும், அவள் ஒரு தொடர் கதை, இளமை ஊஞ்சலாடுகிறது, அவள் அப்படித்தான், சட்டம் என் கையில் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கமலுக்கு ஜோடி

கமலுக்கு ஜோடி

கமலுக்கு பர்ஃபெக்ட் ஜோடி என்றால் அது நடிகை ஸ்ரீபிரியாதான் என்ற பேச்சும் இருந்தது. அந்தளவுக்கு படங்களில் இருவரின் கெமிஸ்ட்ரியும் வொர்க்கவுட்டாகும். மக்கள் நீதிமய்யம் தொடர்பான கூட்டங்களில் பங்கேற்று வரும் ஸ்ரீபிரியா, கட்சி சார்பாக கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்.

நேர்மையாக இருக்கும்

நேர்மையாக இருக்கும்

சினிமா, டிவி நிகழ்ச்சி தொடர்பாகவும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பாக பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வந்தார். அவரது கருத்துக்கள் பெரும்பாலும் நேர்மையாக இருக்கும் என்பதால் ரசிகர்கள் மத்தியில் அவரது கருத்து நல்ல வரவேற்பு இருக்கும்.

முதல்வருக்கு பதில்

முதல்வருக்கு பதில்

இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை கலாய்த்து டிவிட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா. நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கமல்ஹாசனுக்கு அரசுத் துறையை பற்றி என்ன தெரியும்? சினிமா பற்றிதான் தெரியும். கமல்ஹாசன் யாரோ எழுதி கொடுத்ததை படிக்கிறார் அவருக்கு ஒன்றும் தெரியாது என்றார்.

ஹய்யோ ஹய்யோ..

ஹய்யோ ஹய்யோ..

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இந்த கருத்துக்கு, நடிகை ஸ்ரீபிரியா டிவிட்டரில் பதில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டிருப்பதாவது, ‘கமலஹாசன் யாரோ எழுதிக்கொடுத்ததை படிக்கிறார் அவருக்கு ஒன்றும் தெரியாது
- முதல்வர் எடப்பாடி'-ஹய்யோ ஹய்யோ...ராமாயணம் எழுதியது யார் சொல்லுங்க பாப்போம்! என்று கலாய்த்திருக்கிறார்.

நடிகை கிண்டல்

கட்சி சார்ந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, கம்பராமயாணத்தை எழுதியது சேக்கிழார் என்றார். கம்பராமாயணத்தை எழுதியது கம்பர் என்று கூட முதல்வருக்கு தெரியவில்லை என பலர் ட்ரோல் செய்தனர். இந்நிலையில் கமல் விவகாரத்தில் அதையே குறிப்பிட்டு நடிகை ஸ்ரீபிரியா கிண்டலடித்திருக்கிறார்.

நீங்க பேசாதீங்க

நீங்க பேசாதீங்க

நடிகை ஸ்ரீபிரியாவின் இந்த டிவிட்டுக்கு ஆதரவும் எதிர்ப்பும் ஒன்றாக எழுந்திருக்கிறது. அவரது இந்த டிவிட்டை சிலர் பாராட்டியிருந்தாலும் கடுமையாக விமர்சித்துள்ளனர். நடிகர் கமல் நடிகைகளுடன் நெருக்கமாக நடித்த காட்சிகளை ஷேர் செய்து, இதையெல்லாம் நீங்கள் பேசக்கூடாது என குறிப்பிட்டுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X