டாஸ்க்கு டஃப்பா இருந்தாலும்.. என்ன பிக் பாஸ் நிகழ்ச்சி பத்தி ஸ்ரீபிரியா இப்படி சொல்லிட்டாங்க?

சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியில் டாஸ்க் எல்லாம் டஃப் ஆகத் தான் இருக்கிறது. ஆனாலும், போரடிக்குதே என ட்வீட் போட்டுள்ளார் நடிகை ஸ்ரீபிரியா.

முதல் சீசனில் இருந்தே பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்து அதனை விமர்சித்தும் வருகிறார்.

ஸ்ரீபிரியா பதிவிடும் ட்வீட்களுக்கு பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் விமர்சனம்

பிக் பாஸ் விமர்சனம்

நடிகை ஸ்ரீபிரியா தொடர்ந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்தே பார்த்து வருகிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் தீவிரமான ரசிகை என்றும் சொல்லலாம். ஆனால், அதே சமயம் கமல் தட்டிக் கேட்கிறாரோ இல்லையோ, டக்குன்னு ட்விட்டரில் தட்டி கேட்பது ஸ்ரீபிரியா தான்.

எரிப்பது தவறு

எரிப்பது தவறு

எவிக்‌ஷன் நாமினேஷனுக்காக பிக் பாஸ் போட்டியாளர்களின் போட்டோக்களை போட்டு தீயில் எரிப்பது எல்லாம் ரொம்பவே தவறான செயல் என உடனடியாக கண்டித்து இருந்தார் ஸ்ரீபிரியா. அவரது கருத்தை ஏகப்பட்ட பிக் பாஸ் ரசிகர்களும் ஆமோதித்து இருந்தனர்.

ஷிவானிக்கும் சுச்சிக்கும் சண்டை

ஷிவானிக்கும் சுச்சிக்கும் சண்டை

பாலாஜி முருகதாஸ் விவகாரத்தில் சுசித்ராவுக்கும் ஷிவானி நாராயணனுக்கும் சீக்கிரமே சண்டை வரும் என முன்னதாகவே கணித்து ட்வீட் போட்டு இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால், சீக்கிரமே இருவருக்கும் இடையே அடிதடி சண்டையே நடக்கும் போல இருக்கு, அப்படி மட்டும் நடந்தால், ஷிவானி கொலை கேஸில ஜெயிலுக்குத்தான் போகணும்.

டாஸ்க் டஃப்பா தான் இருக்கு

டாஸ்க் டஃப்பா தான் இருக்கு

இந்நிலையில், நேற்றைய நிகழ்ச்சியை பார்த்து விட்டு ஸ்ரீபிரியா போட்ட ட்வீட் வைரலாகி வருகிறது. 48 மணி நேரம் மணிக்கூண்டு டாஸ்க் என டாஸ்க் டஃப்பா இருந்தாலும், எடிட்டர் முடிந்த வரை ஸ்பீட் பண்ணி எடிட் பண்ணியும், நிகழ்ச்சி பார்க்க சுவாரஸ்யமே இல்லாமல் போரடிக்குதேப்பா என ஓப்பனாகவே விமர்சித்து ட்வீட் போட்டுள்ளார்.

தூக்கம் வருது

தூக்கம் வருது

மேலும், தூக்கம் வரும் எமோஜியை வேற போட்டு பிக் பாஸ் நிகழ்ச்சியை ரொம்பவே பங்கம் பண்ணி உள்ளார். இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியை நடத்தும் இயக்குநர் மாறிட்டாரா? என்கிற கேள்விகளையும் ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். புதுசா பண்ண தெரியவில்லை என்றால், வழக்கம் போல இந்தி பிக் பாஸ், தெலுங்கு பிக் பாஸை காப்பி அடிக்கலாமே என்றும் கலாய்க்கின்றனர்.

ரொம்ப போர்

ரொம்ப போர்

கடந்த வாரங்களில் நடந்த லக்சரி பட்ஜெட் டாஸ்க் கூட ஒரு டிராமா போலவும், பிசிக்கல் டாஸ்க்காக இருந்தாலும், ஒரு ஜாலியாகவும், போரடிக்காமல் விறு விறுப்பாக சென்றன. ஆனால், மணிக்கூண்டு டாஸ்க் வைத்து விட்டு, அதன் இடை இடையே ரிவர்ஸ்ல போறது, ஜிப்ரிஷ் மொழியில் பேசுவது, பட்டாணி, சுண்டல், குல்ஃபி விற்பது என்று ரசிகர்களுக்கு நல்லா குல்லா போட்டுவிட்டார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X