சும்மாவே கால் தாளம் போடும்...சலங்கையைக்கட்டிவிட்டால்? பிக்பாஸ் 4 குறித்து பிரபல நடிகை ட்வீட்!
சென்னை: பிக்பாஸ் தமிழ் சீசன் 4 பிரம்மாண்ட துவக்க விழா நிகழ்ச்சியுடன் தொடங்கி உள்ளது. நடிகை ஸ்ரீபிரியா பிக்பாஸ் நிகழ்ச்சியை இப்பவே விமர்சிக்க தொடங்கி விட்டார்.
3 சீசன்களை தொகுப்பாளராக வெற்றிகரமாக அசத்திய உலகநாயகன் கமல்ஹாசன் 4வது சீசனையும் வெளுத்து வாங்கி வருகிறார்.
இந்நிலையில், பிக்பஸ் நிகழ்ச்சி தொடங்கிய நிலையில் பிரபல நடிகை ஸ்ரீபிரியா வரிசையாக ட்வீட் போட்டு கொண்டாடி வருகிறார்.

பிக்பாஸ் பிரி(யா)யை
பிக்பாஸ் முதல் சீசனில் இருந்தே அந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்தும் விமர்சித்தும் வருகிறார் நடிகை ஸ்ரீபிரியா. கமல்ஹாசனுடன் ஏகப்பட்ட படங்களில் நடித்த அவர், மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் அங்கம் வகிக்கிறார். பிக்பாஸ் பிரியையான இவர், பிக்பாஸ் தொடங்கிய நிலையில், ஏகப்பட்ட ட்வீட்களை பதிவிட்டு வருகிறார்.

சும்மாவே கால் தாளம் போடும்
"சும்மாவே கால் தாளம் போடும்... சலங்கையைக்கட்டிவிட்டால்? ஜனக் ஜனக் பாயல் பாஜே தான்... வெளியே போகாமல் வீட்டிலேயே இருக்கும் சமயம் இது ...what to do should I review as usual ?" என ட்வீட் போட்டு பிக் பாஸ் ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளார்.

போட்டியாளர்களுக்கு வாழ்த்துக்கள்
பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளர்களாக கலந்து கொண்ட நடிகை ரேகா, சனம் ஷெட்டி, ரியோ ராஜ் உள்ளிட்டோர்களுக்கு முதற்கட்டமாக வாழ்த்து சொல்லி ட்வீட் போட்ட அவர், தொடர்ந்து ஏகப்பட்ட ட்வீட்களை போட்டு வருகிறார். மேலும், ரசிகர்களின் கமெண்ட்டுகளுக்கும் சளைக்காமல் பதில் அளித்து வருகிறார்.

அழகு பொண்ணு ஷிவானி
கவர்ச்சி உடையில் ரசிகர்களின் கண்களை குளிர வைக்கும் அளவுக்கு மெழுகு டாலாக நடனமாடிய நடிகை ஷிவானியின் என்ட்ரியை பார்த்த ஸ்ரீபிரியா, அழகு பொண்ணு ஷிவானி, அழகா தமிழ் பேசுறீங்க, தமிழ் பேசும் டாஸ்க்கில் மற்ற போட்டியாளர்களும் தமிழில் தடையின்றி பேச வேண்டும்

தண்ணீர் ஊத்தணும்
ஒவ்வொரு போட்டியாளர்கள் கையிலும் உலகநாயகன் கமல்ஹாசன் பூச்செடிகளை கொடுத்து பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைக்கிறார். அதை பார்த்த நடிகை ஸ்ரீபிரியா, "செடி வெச்சா பத்தாது...கண்டிப்பா தண்ணீர் ஊத்துங்க பிள்ளைகளா" என இப்பவே விமர்சித்து கமெண்ட் போட ஆரம்பித்துவிட்டார்.


Click it and Unblock the Notifications











