லாஸ்லியாவ நம்பாதீங்க.. சேரனிடம் போட்டுக்கொடுத்த மோகன் வைத்யா.. கண்டித்த நடிகை!
Recommended Video
சென்னை: பிக்பாஸ் வீட்டிற்கு விருந்தாளியாக வந்துள்ள மோகன் வைத்யா லாஸ்லியா நடந்து கொள்ளும் விதம் குறித்து சேரனிடம் போட்டுக்கொடுத்ததை மூத்த நடிகை ஒருவர் கண்டித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மோகன் வைத்யா, சாக்ஷி, அபிராமி ஆகியோர் நாமினேஷன் முறைப்படி கடந்த சில வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் விட்டில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் சாக்ஷி, மோகன் வைத்யா, அபிராமி ஆகியோர் நேற்று முன்தினம் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். விருந்தாளிகளாக அவர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளனர்.

பழிவாங்க வந்திருக்காங்க
அவர்களில் அபிராமி மட்டுமே போன மாதிரி வந்திருப்பதாகவும் மற்ற இருவரும் பழிவாங்க வந்திருப்பதாகவும் கூறினார். அதற்கு ஆமாம் என்ற அபிராமி, அது பிரிபிளான்ட் எனக்கு தெரியாது என்றார். மேலும் நான் உங்களுடன் ஜாலி பண்ண வந்திருக்கிறேன் என்றும் அபிராமி கூறினார்.

எல்லாம் நடிப்பு
இதனை தொடர்ந்து பேசிய மோகன் வைத்யா, வனிதா, சேரன் ஆகியோரிடம் அவர்கள் உண்மையாக இருக்கிறார்கள் என்று நினைத்துதான் பழகினேன். ஆனால் போய் பார்த்தப்பிறகு தான் தெரிந்தது எல்லாம் நடிப்பு என சாண்டி,கவின் குறித்து கூறினார்.

பேசி சிரித்தார் லாஸ்லியா
எப்படியெல்லாம் கிண்டல் பண்ணியிருக்காங்க என்றும் வேதனைப்பட்டார். பின்னர் சேரனிடம் பெட்ரூமில் தனிமையில் பேசிய மோகன் வைத்யா, லாஸ்லியா சேரன் குறித்து கவினிடம் பேசி சிரித்ததை கூறினார்.

சேரனுக்கு அட்வைஸ்
மேலும் லாஸ்லியாவுக்கு முக்கியத்துவம் தர வேண்டாம் என்றும் நீங்கள் நீங்களாகவே இருங்கள் என்றும் சேரனுக்கு அட்வைஸ் செய்தார் மோகன் வைத்யா. உங்களிடம் பேசிவிட்டு பின்னால் உங்களை பற்றி பேசி சிரிக்கிறார் என்றும் கூறினார் மோகன் வைத்யா.

கண்டித்த நடிகை
ஆனால் இதனைக்கேட்ட சேரன், காதலிப்பவர்கள் அப்படிதான் இருப்பார்கள். நாம் எப்போதும் போல் நாமாகவே இருப்போம் என்று கூறினார். மோகன் வைத்யா போட்டுக்கொடுத்ததை கவனித்த நடிகை ஸ்ரீபிரியா அவரை கண்டித்துள்ளார்.
சொல்லக்கூடாது
அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் அய்யயோ மிஸ்டர் மோகன் வைத்யா ரூல்ஸ்படி இதெல்லாம் சொல்லக்கூடாது என்றார்.
அப்ரிஷியேட் பண்ணாதீங்க
மேலும் மோகன் வைத்யாவின் போட்டுக்கொடுக்கும் வேலையை ஊக்குவிக்காதீர்கள்.. ஷ்ப்பா... என்று பதிவிட்டிருக்கிறார் ஸ்ரீபிரியா.


Click it and Unblock the Notifications











