Exclusive:என் பேச்சை கேட்டிருந்தால் அமலாபாலுக்கு இந்த நிலைமை வந்திருக்காது: பீல் பண்ணும் ரீல் அம்மா

ஆடை மற்றும் ஹவுஸ் ஓனர் படத்தில் நடித்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறார் நடிகை ஸ்ரீரஞ்சனி.

சென்னை: தன்னுடைய பேச்சைக் கேட்டு நடந்திருந்தால் அமலா பாலுக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என நடிகை ஸ்ரீரஞ்சனி தெரிவித்துள்ளார்.

கே.பாலசந்தரின் நாடகங்களின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரீரஞ்சனி. மணிரத்னம் இயக்கிய அலைபாயுதே படத்தில் மாதவனின் அண்ணியா நடித்து, சினிமாவில் அறிமுகமானார்.

Actress Sriranjani talks about Amala pauls Aadai

அதன் பிறகு, அம்மா, அண்ணி என குணச்சித்திர வேடங்களிலேயே நடித்து வந்தார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஹவுஸ் ஓனர் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ரீரஞ்சினி. 'என்ன திடீர்னு ஹீரோயின் புரொமோஷன்' எனும் கேள்வியுடன் அவரை சந்தித்தேன்.

நம்மிடம் அவர் பேசியதில் இருந்து...

"ஹவுஸ் ஓனர் படம் தான் நான் முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தப்படம். லட்சுமி ராமகிருஷ்ணன் தான் அதில் நடிக்க இருந்தார். ஆனால் இயக்குனர் பணியின் சுமை அதிகமாக இருந்ததால் இந்த வாய்ப்பை எனக்கு தந்துவிட்டார்.

மழையின் பின்னணியில் ஒரு அருமையான காதலையும், கணவன் - மனைவி உறவையும் படத்தில் காட்டியிருப்பார் இயக்குனர். இந்த படம் எனது சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத அனுபவம்", என்றவரிடம், 'ஆடைப் படத்தில் அமலா பாலுக்கு அம்மா நடிச்சிருக்கீங்களே, பொண்ண இப்படியா வளர்க்கிறதுன்னு யாரும் உங்களை திட்டலயா' என்றேன்.

Actress Sriranjani talks about Amala pauls Aadai

" இல்ல என்னை யாரும் திட்டல. ஆடை படம் வெளிவந்ததும் அமலா பாலையும் யாரும் திட்டமாட்டார்கள். இந்த படத்தில் நான் பிளாஷ் பேக்கில் வந்து கொண்டே இருப்பேன். அமலா பால் கஷ்டத்தில் இருக்கும் போது, பிளாஷ் பேக்கில் நான் சொல்லும் அறிவுரைகள் வந்து போகும். அம்மா சொன்னதை அப்போதே கேட்டிருக்கலாமே என அவருக்கு தோன்றும்.

பொதுவாக நம் வீட்டில் உள்ள பெரியவர்கள் ஏதாவது அட்வைஸ் கொடுத்துக் கொண்டே இருப்பார்கள். ஏன் இப்டி டிரஸ் பண்ற? ஒழுங்கா நடந்துக்கோனு ஏதாவது சொல்லிகிட்டே இருப்பாங்க. ஆனா அதை பசங்க காதுல வாங்க மாட்டாங்க. பிரச்சினைன்னு வரும்போது தான் பெரியவங்க சொன்ன அட்வைஸ் பிரியும். அது தான் ஆடை படத்துல அமலா பாலுக்கும் எனக்குமான உறவு.

மற்றபடி எங்க இருவருக்கும் வேறு என்ன ஒற்றுமைன்னா, ரெண்டு பேருக்குமே ஒரே தேதியில் தான் பிறந்தநாள். அமலா பால் ஒரு தைரியமான பொண்ணு. அவங்களோட சேர்ந்து நடிச்சது உண்மையிலேயே ஒரு நல்ல அனுபவம்" என நிறுத்தியவரிடம், ஆடை படம் சர்ச்சைக்கு உள்ளாகி இருப்பது பற்றி கேட்டோம்.

"சர்ச்சை என்பது வாழ்வின் ஒரு பகுதி. சினிமாவில் அது இன்னும் சகஜம். ஒரு பெண்ணாக அமலா பால் அந்த ரோலில் நடித்திருப்பது சவாலான விஷயம். மக்கள் அதை ஏற்றுக்கொண்டு, மதிப்பளிக்க வேண்டும். சினிமாவில் விதிகள் எதுவும் கிடையாது. எனவே எல்லா வகையான சினிமாவையும் ரசிகர்கள் கொண்டாட வேண்டும்", என கேட்டுக்கொண்டு பேட்டியை நிறைவு செய்தார் ஸ்ரீரஞ்சனி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X