நீங்கள் கொரோனாவை விட மோசம்.. வாங்க ஜிஎஸ்டி பண்ணலாம்.. சர்ச்சை இயக்குநரை படுக்கைக்கு அழைத்த நடிகை!

சென்னை: நீங்கள் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள் என சர்ச்சை இயக்குநருக்காக உருகியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. பட வாய்ப்பு தருவதாக பிரபலங்கள் பலரும் தன்னை செக்ஸ்க்கு பயன்படுத்திக் கொண்டு வாய்ப்பு தராமல் ஏமாற்றி விட்டார்கள் என கூறி பரபரப்பை கிளப்பினார்.

இதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு பிரபலங்கள் பலரும் தன்னுடன் செக்ஸ் வைத்துக்கொண்டதாக கூறி ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தார்.

ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்

ஃபேஸ்புக்கில் ஆக்ட்டிவ்

அவரது குற்றச்சாட்டுகளில் இருந்து நடிகர்கள் விஷால், ஸ்ரீகாந்து இயக்குநர் முருகதாஸ் என யாரும் தப்பவில்லை. இதனால் ஸ்ரீரெட்டி எப்போது யாரை பற்றி என்ன சொல்வாரோ என்று மிரண்டு போயினர் தமிழ் திரைத்துறையினர். எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஸ்ரீரெட்டி தொடர்ந்து பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவந்தார்.

என்னை தேவதை என்றார்

என்னை தேவதை என்றார்

தொடர்ந்து கவர்ச்சி போட்டோக்களையும் பச்சை பச்சையாக கேப்ஷன்களையும் கொடுத்து ஃபேஸ்புக்கையே வெட்கப்பட செய்கிறார். இந்நிலையில் சமீபத்தில் சர்ச்சை இயக்குநரான ராம்கோபால் வர்மா, தனது காலை தொட்டு தடவி தன்னை ஒரு தேவதை என்றார். ஆனால் தற்போது என்னை ஏமாற்றிவிட்டு வேறு ஒரு பெண்ணின் காலை தடவி கொண்டிருக்கிறார். நான் வேதனையில் உள்ளேன் என்று கூறினார்.

டேட்டிங் போகனும்

டேட்டிங் போகனும்

இந்நிலையில் கடந்த சில நாட்களாக சர்ச்சை இயக்குநரான ராம் கோபால் வர்மா மீது காதல் கொண்டு உருகி வருகிறார். அவருடன் டேட்டிங் செல்ல வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என தெரிவித்து பரபரப்பை கிளப்பி வருகிறார். ஆனால் ராம் கோபால் வர்மா ஸ்ரீரெட்டியுடனான தொடர்பை மறுத்து வருகிறார்.

ஜிஎஸ்டி செய்யலாம்

ஜிஎஸ்டி செய்யலாம்

இந்நிலையில் ராம் கோபால் வர்மா குறித்து நடிகை ஸ்ரீரெட்டி தனது முகநூல் பக்கத்தில் போஸ்ட் ஒன்றை பதிவிட்டிருக்கிறார். அதில் நீங்கள் கொரோனாவை விட அதிக பாதிப்பை ஏற்படுத்துகிறீர்கள். நான் இன்னும் உங்களை காதலித்து கொண்டுதான் இருக்கிறேன். நாம் தனிப்பட்ட முறையில் ஜிஎஸ்டி செய்யலாம் என பதிவிட்டிருக்கிறார்.

செக்ஸை மையப்படுத்தி

செக்ஸை மையப்படுத்தி

ஜிஎஸ்டி என்றால் சரக்கு மற்றும் சேவை வரி என்று நினைக்க வேண்டாம். காட், செக்ஸ் அண்ட் ட்ரூத் ஆகும். இது ராம் கோபால் இயக்கிய டாக்குமென்ட்ரி படம் ஆகும். இந்தப் படத்தில் அமெரிக்காவை சேர்ந்த மியா மல்கோவா நிர்வாணமாக நடித்திருந்தார். செக்ஸை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்தை 2018ஆம் குடியரசு தினத்தில் வெளியிட்டு கைதானார் ராம்கோபால் வர்மா.

Recommended Video

Sri Reddy Bathroom Selfie: உள்ளாடை அணியாத போட்டோ
படுக்கைக்கு அழைப்பு

படுக்கைக்கு அழைப்பு

இந்நிலையில் உடலுறவு கொள்ளலாம் என ராம்கோபால் வர்மாவை தனது ஃபேஸ்புக் பதிவு மூலம் அழைத்திருக்கிறார் ஸ்ரீரெட்டி. கடந்த சில நாட்களாக கராத்தே கல்யாணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகேஷ் குறித்து ஆபாசமாக பேசி பெரும் சர்ச்சைக்கு ஆளானார். இந்நிலையில் ராம்கோபால் வர்மாவை வெளிப்படையாக படுக்கைக்கு அழைத்து மீண்டும் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார் ஸ்ரீரெட்டி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X