என்னை ரேப் பண்ண சொல்றாங்க.. பப்ளிசிட்டிக்காக பண்றாங்க.. சும்மா விடக்கூடாது.. பிரபல நடிகை ஆவேசம்!

சென்னை: தன்னை பாலியல் வன்கொடுமை செய்ய சொல்வதாக தெலுங்கு நடிகை மற்றும் நடன இயக்குநர் மீது நடிகை ஸ்ரீரெட்டி குற்றம்சாட்டியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

Sri Reddy Controversial Post | FB Post

நடிகை ஸ்ரீரெட்டி என்றாலே சர்ச்சை என்றாகி விட்டது. ஹைதராபாத்தில் அரை நிர்வாண போராட்டத்தில் தொடங்கிய அவரது குற்றச்சாட்டுகள் தற்போது சமூக வலைதளங்கள் வரை வந்து நிற்கிறது.

இளம் நடிகர்கள் மீதெல்லம் பாலியல் குற்றச்சாட்டுக்கனை கூறிய ஸ்ரீரெட்டி மூத்த நடிகர்களையும் விளாசி வருகிறார். அவ்வப்போது அரசியலும் பேசி அதிர வைத்து வருகிறார் ஸ்ரீரெட்டி.

ஒரு படம் கூட..

ஒரு படம் கூட..

அண்மையில் சிவராத்திரியை முன்னிட்டு சிவனை போல் வேடமிட்டு வீடியோ வெளியிட்டிருந்தார். அதற்கு ஆதரவும் எதிர்ப்பும் எழுந்து வருகிறது. இதுவரை நடிகை ஸ்ரீரெட்டி நடித்து ஒரு படம் கூட வெளியாகவில்லை. தற்போதுதான் ரெட்டி டைரி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஆனால் நடிகர்களுடன் ஏற்பட்ட தொடர்பால் நடிகை என்று அழைக்கப்படுகிறார் ஸ்ரீரெட்டி.

ராம்கோபால் வர்மா

ராம்கோபால் வர்மா

சமூக வலைதளங்களில் ஆகாதவர்களை வச்சு செய்து வருகிறார் ஸ்ரீரெட்டி. குறிப்பாக பவன் கல்யாணை வாய்க்கு வந்தப்படி அர்ச்சனை செய்து வருகிறார். அண்மையில் இயக்குநர் ராம்கோபால் வர்மாவையும் தனது காலில் விழுந்து கிடந்ததாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

விஷயம் வேறு மாதிரி

விஷயம் வேறு மாதிரி

இந்நிலையில் தெலுங்கு துணை நடிகை கராத்தே கல்யாணி மற்றும் நடன இயக்குநர் ராகேஷை ஆபாசமாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக கராத்தே கல்யாணியும் ராகேஷும் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தனர். இதில் ஸ்ரீரெட்டி கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விஷயம் வேறு மாதிரியானது.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

அதாவது ஸ்ரீரெட்டி, தெலுங்கு நடிகை கராத்தே கல்யாணி மற்றும் டான்ஸ் மாஸ்டர் ராகேஷ் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை பற்றி அவதூறாக பேசியதோடு தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாகவும் அவர் தனது புகாரில் தெரிவித்தார்.

நல்ல ஆதரவு

நல்ல ஆதரவு

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீரெட்டி, தமிழக மக்கள் எனக்கு நல்ல ஆதரவு கொடுக்கிறார்கள். தற்போது இரண்டு படங்களில் நடித்து வருகிறேன். ஆனால் யூடியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் என்னைப்பற்றி தவறான தகவல்கள் பரப்பப்படுகிறது. தெலுங்கு துணை நடிகை ஒருவரும், 50 வயது நிரம்பிய டான்ஸ் மாஸ்டர் ஒருவரும் என்னைப்பற்றி தரக்குறைவான தகவல்களை வெளியிடுகிறார்கள்.

பலாத்காரம் செய்யுங்கள்

பலாத்காரம் செய்யுங்கள்

நான் வீடு வாங்கியது, கார் வாங்கியது எப்படி? எனக்கு எத்தனை ஆண் நண்பர்கள் உள்ளனர்? என்பது பற்றியெல்லாம் தவறான தகவல்களை பரப்புகிறார்கள். அது எனது தனிப்பட்ட வி‌‌ஷயம். நான் யாருடன் பழகினால் அவர்களுக்கு என்ன? என்னை பாலியல் பலாத்காரம் செய்ய வேண்டும் என பேசுகிறார்கள்.

பப்ளிசிட்டிக்காக

பப்ளிசிட்டிக்காக

அவர்களை சும்மா விடக்கூடாது. அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீஸில் புகார் அளித்திருக்றேன். சைபர் கிரைம் போலீசார் உரிய விசாரணை நடத்தி அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன். புகார் சம்பந்தப்ட்ட அனைத்து ஆதாரங்களையும் போலீஸிடம் கொடுத்திருக்கிறேன். என்னைப் பற்றி பேசினால் பப்ளிசிட்டி கிடைக்கும் என இதுபோன்று பேசி வருகிறார்கள் என ஸ்ரீரெட்டி தெரிவித்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X