ஸ்ரீரெட்டியின் ஸ்வீட் ஹார்ட்டாக மாறிய விஷால்! இது எப்ப..?
விஷாலுக்கு ஸ்ரீரெட்டி நன்றி தெரிவித்துள்ளார்
சென்னை: நடிகை ஸ்ரீரெட்டி விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு நடிகர்கள் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார்களைக் கூறி மிகப்பெரிய புயலை கிளப்பினார் ஸ்ரீ ரெட்டி. ஸ்ரீரெட்டியின் புயலால் திரையுலகில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டது.

சில தயாரிப்பாளர்கள் ஸ்ரீரெட்டிக்கு வாய்ப்பு தரவும் முன்வந்தனர். அதன்பிறகு ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை சம்பவங்களை வைத்து ரெட்டி டைரி என்ற தலைப்பில் படமாக்கி வருகின்றனர்.
கொஞ்சநாள் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி ஐதராபாத்தில் பிரபல நடிகை ஒருவருடன் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் ரொமான்ஸ் செய்ததாக கிளப்பிவிட்டார். சினிமாவிலிருந்து இப்போ கிரிக்கெட் போய்ட்டீங்களா..? அப்படியே டெவெலப்பாகி டென்னிஸ், ஃபுட்பால், ஒலிம்பிக்குன்னு உலக அளவுல டிரெண்ட் ஆகுங்க என நெட்டிசன்கள் கலாய்த்தனர்.
இந்த நிலையில், தற்போது நடிகர் விஷாலுக்கு நன்றி தெரிவித்துள்ளார். சண்டக்கோழி 2 செய்தியாளர் சந்திப்பில் பேசிய விஷால், நடிகை ஸ்ரீரெட்டிக்கு தமிழ்ப் படங்களில் வாய்ப்பு கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அவருடன் நடிக்கும் நடிகர்கள் இனி உஷாராக இருப்பார்கள். தவறு நடக்காமல் இருப்பதற்கு அவரை சுற்றி எல்லோரும் கேமரா வைத்து விடுவார்கள் எனக் கூறியிருந்தார்.
பத்திரிகையில் வந்த விஷால் பேட்டியை போட்டோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவிட்டு, நன்றி விஷால் அவர்களே... நீங்க ஒரு ஸ்வீட்ஹார்ட்... ஆனால் கேமரா??? என சிரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











