நடிகையின் கண்ணீர் கதை: வாட்டி வதைத்த புற்றுநோய்.. சொத்தை இழந்து அனாதையாக இறந்த கமலின் முதல் காதலி!
சென்னை: தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருந்த எத்தனையோ நடிகர், நடிகைகள், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டாலும் கூட, தனிப்பட்ட வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களையும், வாழ்நாள் முழுவதும் சோகங்களையும், துக்கங்களையும் மட்டுமே அனுபவித்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீவித்யா வாழ்க்கையில் மகிழ்ச்சியே பார்க்காமல் வாழ்க்கையுடன் போராடி கடைசியில் உயிரிழந்தார்.
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. வாழ்க்கையில் நிறைய துன்பங்களையும், கஷ்டங்களை மட்டும் தான் இவர் அனுபவித்து இருக்கிறார். அவர் முதன் முதலாக அபூர்வராகங்கள் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். முதல் திரைப்படத்திலேயே உலகநாயகன் கமலஹாசன், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது. அதைத் தொடர்ந்து கமலஹாசனுடன் பல படங்களில் ஸ்ரீவித்யா இணைந்து நடிக்க ஆரம்பித்தார். அப்போது தான் கமலின் மீது ஸ்ரீவித்யாவிற்கு காதல் வந்துள்ளது. இந்த விவகாரம் அப்போது பத்திரிகைகளில் கிசுகிசுவாக வெளியே வந்தன. தன்னை விட இரண்டு வயது இளையவரான கமல் மீதான காதலுக்கு, ஸ்ரீவித்யாவின் அம்மா எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த காதல் தோல்வி அடைந்தது.

ஸ்ரீவித்தியாவின் காதல்: முதல் காதல் தோல்வி அடைந்த நிலையில் 1976 ஆம் ஆண்டு ஜார்ஜ் தாமஸ் என்பவரை காதலித்தார். அவரையே திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்ட போது, ஸ்ரீவித்யாவின் அம்மா மீண்டும் பிரச்சனை செய்ய, குடும்பத்தை எதிர்த்து, அவரை திருமணம் செய்து கொண்டார். ஆசைப்பட்டு காதலித்த கணவருடன் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என நினைத்த ஸ்ரீவித்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஜார்ஜ் தாமசுக்கும் ஸ்ரீவித்யாவிற்கும் ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருக்கிறது. இதைத்தொடர்ந்து ஸ்ரீவித்யா தனது கணவர், ஜார்ஜ் தாமசிடம் விவகாரத்தை கேட்டு மன்றாடி இருக்கிறார். ஆனால், அவரோ கிறிஸ்தவ மதத்தை காரணம் காட்டி விவாகரத்து தராமல் இழுத்தடித்து இருக்கிறார். பல போராட்டத்திற்கு பிறகு 1980 ஆம் ஆண்டு இருவரும் முறைப்படி விவகாரத்தை பெற்று பிரிந்தனர்.
கமல் மீதான காதல்: முதல் காதல் தோல்வி, முதல் திருமணமும் தோல்வி என்பதால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த ஸ்ரீவித்யா, அனைத்தையும் மறந்து படத்தின் மீது கவனத்தை செலுத்தி நடித்து வந்தார். ஆனால், ஸ்ரீவித்யாவின் வாழ்க்கையில் விதி வேறுவிதமாக விளையாடி அவரின் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக புரட்டிப்போட்டது. ஸ்ரீவித்யா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, கேரளாவுக்கு சென்று புற்றுநோய்க்கான சிகிச்சையை எடுத்து வந்தார். அந்த நேரத்தில் யாரையும் சந்திக்க விரும்பாத ஸ்ரீவித்யா, கமலஹாசனை மட்டும் சந்தித்து பேச வேண்டும் என ஆசைப்பட்டார். இதை கேள்விப்பட்ட கமல், ஸ்ரீவித்யாவை சந்தித்து ஆறுதலை கூறி வெளிநாட்டில் இதற்கான சிகிச்சை இருக்கிறது. அதில், நிச்சயம் நீ குணமடைந்து விடுவாய் என ஆறுதல் கூறியிருக்கிறார். ஆனால், கமலை சந்தித்த மறுநாளே ஸ்ரீவித்யா துரதிஷ்டவசமாக உயிரிழந்தார். இந்த செய்தி ஒட்டுமொத்த திரை உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இது மட்டுமல்லாமல், தான் இறந்து விடுவோம் என்று தெரிந்து கொண்ட ஸ்ரீவித்யா தனது சொத்துக்களை, தனது உதவியாளருக்கும், இசை, நடனக் கல்லூரியில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களுக்கு உதவித்தொகையாக வழங்கினார்.


Click it and Unblock the Notifications











