குலவை விட்டாரா? படப்பிடிப்பில் ஆர்ப்பாட்டமாகப் பொங்கல் கொண்டாடிய மும்பை ஹீரோயின்
சென்னை: கட்டில் படப்பிடிப்பில் மும்பை நடிகையான சிருஷ்டி டாங்கே, பொங்கல் பண்டிகையை கொண்டாடியுள்ளார்.
தமிழில், அனந்தபுரத்து வீடு உட்பட பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்திருப்பவர் இ.வி.கணேஷ்பாபு. ஏராளமான சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார்.
இவர், யமுனா என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்போது கட்டில் என்ற படத்தை இயக்கி வருகிறார்.

சிருஷ்டி டாங்கே
இதில் அவரே ஹீரோவாகவும் நடித்து வருகிறார். சிருஷ்டி டாங்கே கதாநாயகியாக நடிக்கிறார். மற்றும் மாறன் உட்பட பலர் நடிக்கின்றனர். மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிக்கிறது.

எடிட்டர் லெனின்
பிரபல எடிட்டர் பி.லெனின் இதன் கதை, திரைக்கதை, வசனத்தை எழுதியுள்ளார். நமது பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் முயற்சியாக இந்தப் படம் இருக்கும் என்று கணேஷ்பாபு ஏற்கனவே கூறியிருந்தார்.

பொங்கல்
இந்நிலையில், இந்தப் படக்குழு, ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடியுள்ளது. மும்பை பெண்ணான சிருஷ்டி டாங்கே, பொங்கல் கொண்டாடியதை படக்குழு ஆச்சர்யமாகப் பார்த்துள்ளது.

தனிச்சிறப்பு
இதுபற்றி இயக்குனர் கணேஷ்பாபு கூறும்போது, உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் சொல்லும் நன்றியறிதலாகக் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் பண்டிகையை, சிருஷ்டி டாங்கே படக்குழுவினரோடு கொண்டாடியது தனிச்சிறப்பு என்றார்.

விரைவில் இசை
கட்டில் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடந்து வருகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் இசை வெளியீடு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.


Click it and Unblock the Notifications











