காட்டுத் தீயில் கருகும் விலங்குகள்.. நெருப்பில் சிக்கித்தவிக்கும் வீடியோவை வெளியிட்டு கதறும் நடிகை!

சென்னை: ஆஸ்திரேலிய காட்டுத்தீயில் சிக்கி தவிக்கும் வீடியோக்களை ஷேர் செய்து கவலை தெரிவித்திருக்கிறார் நடிகை சிருஷ்டி டாங்கே.

நடிகை சிருஷ்டி டாங்கே 2010ஆம் ஆண்டு வெளியான காதலாகி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார். தொடர்ந்து யுத்தம் செய், மேகா, டார்லிங் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார் சிருஷ்டி டாங்கே. தர்மதுரை படத்தில் அவர் நடித்திருந்த ஸ்டெல்லா என்ற கதாப்பாத்திரம் பெரும் வரவேற்பை பெற்றது.

ராஜாவுக்கு செக்

ராஜாவுக்கு செக்

சிருஷ்டி டாங்கே கடைசியாக பொட்டு என்ற படத்தில் நடித்தார். தற்போது சேரனுடன் ராஜாவுக்கு செக் என்ற படத்தில் நடித்துள்ளார்.

பதற வைக்கும் வீடியோ

பதற வைக்கும் வீடியோ

அந்தப் படம் ரிலீஸ்க்காக காத்திருக்கிறது. இந்நிலையில் நடிகை சிருஷ்டி டாங்கே தனது டிவிட்டர் பக்கத்தில் பதற வைக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

48 கோடி விலங்குகள்

48 கோடி விலங்குகள்

அதில் ஆஸ்திரேலியாவில் பற்றி எரியும் காட்டுத் தீயை ஷேர் செய்திருக்கிறார். ஆஸ்திரேலிய காட்டுத் தீயில் இதுவரை 48 கோடி வன விலங்குள் கருகி உயிரிழந்துள்ளன.

சிருஷ்டி வீடியோ

இதுதொடர்பான போட்டோக்களும் வீடியேக்களும் வெளியாகி இதயத்தையே நடுநடுங்க வைக்கிறது. இந்நிலையில் சுற்றி எரியும் காட்டுத்தீக்கு நடுவில் விலங்குகள் சிக்கி தவிக்கும் வீடியோவை வெளியிட்டிருக்கிறார் சிருஷ்டி டாங்கே.

தீயின் கோர நாக்குகள்

தீயின் கோர நாக்குகள்

இந்த வீடியோக்களை ஏற்க தனது மனம் மறுக்கிறது என்றும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும் தீயின் கோர நாக்குகளுக்கு இரையாகி கரிக்கட்டைகளாக கிடக்கும் கங்காரு உள்ளிட்ட விலங்குகளின் போட்டோவையும் ஷேர் செய்துள்ளார்.

ஹேஷ்டேக்

ஆஸ்திரேலிய கண்டத்தை ரணமாக்கியுள்ள இந்த காட்டுத்தீக்கு இதுவரை 23 பேர் பலியாகியுள்ளனர்.
ஆஸ்திரேலிய காட்டுத் தீக்கு வேதனை தெரிவித்து #PrayForAustralia என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்டிங்கில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X